முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயார்”..!! ஜாபர் சாதிக் வழக்கு அமலாக்கத்துறைக்கு அதிரடி உத்தரவு..!!

I am ready to accept any conditions imposed by the court.
07:40 AM Nov 20, 2024 IST | Chella
Advertisement

திமுக முன்னாள் நிர்வாகியும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. ஜாபர் சாதிக், ஜூன் 26ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைதானார். இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisement

302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், ஜாபர் சாதிக், மனைவி அமீனாபானு, சகோதரர் முகமது சலீம், இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 தனி நபர்களும், ஜாபர் சாதிக்கின் பட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முகமது சலீம், ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், “என்னிடம் அமலாக்கத்துறை விசாரணை முடிவுற்று குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளையும் ஏற்க நான் தயாராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு 13-வது கூடுதல் சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக அமலாக்கதுறை நவ.22ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

Read More : வங்கக் கடலில் நிகழும் திடீர் மாற்றம்..!! தமிழ்நாட்டிற்கு புயல் எச்சரிக்கை..? இனிதான் பருவமழையின் ஆட்டமே இருக்கு..!!

Tags :
சட்டவிரோத பரிவர்த்தனைபோதைப்பொருள் கடத்தல் வழக்குஜாபர் சாதிக்
Advertisement
Next Article