நாடாளுமன்ற தேர்தலுக்கு ரெடி.! மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் கேஎன் நேரு அதிரடி பேட்டி.!
2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை நமது நாடு எதிர்நோக்கி காத்திருக்கிறது. கடந்த பத்து வருட பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் உன் பின்தங்கி இருக்கிறது. இதன் காரணமாக விலைவாசி அதிகரித்திருப்பதோடு நாட்டின் பணவீக்க விகிதம் பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
இதன் காரணமாக வர இருக்கின்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து தேசமே காத்திருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன. இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய மாநில கட்சியாக திராவிட முன்னேற்ற கழகம் இருக்கிறது. இந்தக் கூட்டணி வலுப்பெற்று மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்தும் என்பது பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூத் ஏஜெண்டுகள் பயிற்சி முகாம் திருச்சியில் தொடங்கி முக்கிய நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டங்களில் அமைச்சர்கள் எம்பிக்கள் ஆகியோர் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறார் அமைச்சர் கேஎன் நேரு.
இந்தக் கூட்டத்தில் பேசியிருக்கும் அவர் நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலை சந்திக்க தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதற்கு தயார் நிலையில் இருக்கும் படி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்களும் அதன் தொண்டர்களும் தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.