For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Maldives | இந்தியா புறக்கணிப்பு எதிரொலி.! "சுற்றுலாவில் எங்களுக்கு உதவுங்கள்"… மாலத்தீவு கோரிக்கை.!!

03:51 PM Apr 12, 2024 IST | Mohisha
maldives   இந்தியா புறக்கணிப்பு எதிரொலி    சுற்றுலாவில் எங்களுக்கு உதவுங்கள் … மாலத்தீவு கோரிக்கை
Advertisement

இந்திய சுற்றுலா பயணிகளை மீண்டும் ஈர்ப்பதற்காக இந்தியாவின் முக்கிய நகரங்களில் ரோட் ஷோ நடத்த இருப்பதாக மாலத்தீவை சேர்ந்த முக்கியமான சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கக் கூடிய ஒரு தீவு நாடு மாலத்தீவு. சுற்றுலாவை முக்கிய தொழிலாக கொண்ட மாலத்தீவு கொரோனா காலகட்டத்தின் போது சிறந்த சுற்றுலா தளமாக உலகெங்கிலும் பிரபலம் அடைந்தது.

Advertisement

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர்கள் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட பெரும்பாலானோர் மாலத்தீவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். இதனால் அந்த நாட்டின் பொருளாதாரமும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாலத்தீவைச் சேர்ந்த அமைச்சர்கள் இந்தியா குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த கருத்து மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது.

மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பல பிரபலங்களும் இந்தியர்கள் மாலத்தீவை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளம் மூலமாக பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து பெரும்பாலான இந்தியர்கள் மாலத்தீவு சுற்றுலாவை புறக்கணிக்க தொடங்கினர். இதனால் மாலத்தீவு நாட்டிற்கு மிகப் பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது.

மாலத்தீவு அமைச்சர்களின் கருத்தை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் தங்களது மாலத்தீவு சுற்றுப்பயணத்தை ரத்து செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மாலத்தீவு நாட்டின் சுற்றுலாவை கடுமையாக பாதித்திருக்கிறது. இந்தப் பாதிப்பு மாலத்தீவு நாட்டின் சுற்றுலாத்துறை புள்ளி விவரங்களிலும் பிரதிபலித்திருக்கிறது.

மாலத்தீவுகளின் சுற்றுலா அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி நிலவரப்படி, மொத்தமாக வந்த 6,63,269 சுற்றுலா பயணிகள் மாலத்தீவிற்கு வருகை புரிந்துள்ளனர். இவர்களில் சீனாவில் இருந்து அதிகபட்சமாக 71,995 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து இங்கிலாந்தில் இருந்து 66,999 சுற்றுலா பயணிகளும் ரஷ்யாவில் இருந்து 66,803 சுற்றுலாப் பயணிகளும் இத்தாலியில் இருந்து 61,379 சுற்றுலா பயணிகளும் வருகை புரிந்து இருக்கின்றனர். இந்தியாவிலிருந்து 37,417 நல்லா பயணிகள் மட்டுமே மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

மாலத்தீவு செல்லும் இந்திய பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து மாலத்தீவு பயண முகவர்கள் மற்றும் டூர் ஆபரேட்டர் சங்கம் இந்திய தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகத்துடன் நெருக்கமாக செயல்பட இருப்பதாக பயண முகவர்கள் மற்றும் டூர் ஆபரேட்டர் சங்கம் அறிவித்துள்ளது என சன் எம்வி இணையதளம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மாலத்தீவு சுற்றுலாவை இந்தியாவில் பிரபலப்படுத்துவதற்காக முக்கிய நகரங்களில் சாலை பேரணி நடத்துவதற்கும் இந்தியாவில் செலிபிரிட்டி மற்றும் மீடியா துறையில் பணிபுரிபவர்களை மாலத்தீவிற்கு சிறப்பு சுற்றுலா அழைத்துச் செல்ல இருப்பதாகவும் மாலத்தீவு பயண முகவர்கள் மற்றும் டூர் ஆபரேட்டர் சங்கம் தெரிவித்துள்ளது.

மாலத்தீவிற்கு இந்தியா ஒரு முக்கியமான சுற்றுலா சந்தையாக இருக்கும் அதே வேளையில், மாலத்தீவை ஒரு முதன்மையான பயண இடமாக மேலும் மேம்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் உள்ள முக்கிய பயண சங்கங்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுடன் கூட்டு சேர்வதற்கு தாங்கள் எதிர்பார்த்திருப்பதாக MATATO( மாலத்தீவு பயண முகவர்கள் மற்றும் டூர் ஆபரேட்டர் சங்கம்) தெரிவித்துள்ளது.

Read More: VIRAL | ‘பறக்கும் விமானத்தில் காதல் ஜோடி சில்மிஷம்’… அதிர்ச்சியில் உடைந்த சக பயணிகள்.!!

Tags :
Advertisement