For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகத்தில் மறுவாக்குப்பதிவா?… கணக்கெடுக்கும் பணி தீவிரம்!… சத்யபிரதா சாஹூ முக்கிய அறிவிப்பு!

06:46 AM Apr 21, 2024 IST | Kokila
தமிழகத்தில் மறுவாக்குப்பதிவா … கணக்கெடுக்கும் பணி தீவிரம் … சத்யபிரதா சாஹூ முக்கிய அறிவிப்பு
Advertisement

Re-voting: தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்துள்ளதால் மறு வாக்குப்பதிவு நடைபெறாது என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

Advertisement

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 68,321 வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் வாக்களித்தனர். தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மிகவும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது. இந்தநிலையில், தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ பேசியதாவது, தமிழகத்தில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்கு சதவீதத்தை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுவருவதாகவும், தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் அலுவலர்கள் இறுதி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படாது. அனைத்து தொகுதிகளிலும் மிகவும் பாதுகாப்பாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிகளில் உள்ள ஸ்டிராங் ரூம்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு துணை ராணுவத்தினர் உள்ளிட்ட 4 அடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் தென்சென்னை தொகுதியில் முதலில் அறிவிக்கப்பட்டதை விட 13.55 % வாக்குகளை குறைத்து அறிவித்துள்ளது. மத்திய சென்னையில் முதலில் அறிவித்ததை விட 13.44 % குறைத்தும், தூத்துக்குடியில் முதலில் அறிவித்ததை விட 10.97 % குறைத்தும் வடசென்னையில் முதலில் அறிவித்ததை விட 9.13 % குறைத்தும், ஸ்ரீபெரும்புதூரில் முதலில் அறிவித்ததை விட 9.56% குறைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதலில் அறிவித்ததை விட 8.36% குறைத்தும்,கோவையில் முதலில் அறிவித்ததை விட 6.36% வாக்குகள் குறைத்தும், குமரியில் முதலில் அறிவித்ததை விட 4.69% குறைத்தும்,திருச்சியில் முதலில் அறிவித்ததை விட 3.79% வாக்குகள் குறைத்தும், சிவகங்கையில் முதலில் அறிவித்ததை விட 7.11 % குறைத்தும் மதுரையில் முதலில் அறிவித்ததை விட 7.06% வாக்குகள் குறைத்தும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

Readmore: இந்த ஆடைகளை அணிந்தால் கோடைக்காலத்திற்கு சும்மா ஜம்முனு இருக்கும்…!

Advertisement