For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரீ-ரிலீஸ் ஆன அஜித்தின் ஹிட் படம் "தீனா"..! 3 நாளில் இத்தனை கோடி வசூலா?

11:21 AM May 04, 2024 IST | shyamala
ரீ ரிலீஸ் ஆன அஜித்தின் ஹிட் படம்  தீனா     3 நாளில் இத்தனை கோடி வசூலா
Advertisement

2004ம் வருடம் வெளியாகி விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது கில்லி இந்த படம் சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்போது எந்த பெரிய நடிகர்களின் படங்களும் தியேட்டரில் ஓடவில்லை என்பதலோ என்னவோ, இப்படத்திற்கு அதிக கூட்டம் சென்றது. 2 வாரங்களுக்கும் மேல் ஓடிய கில்லி படம் 25 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கெத்து காட்டினார்கள்.

Advertisement

இதைத்தொடர்ந்து விஜயின் போட்டி நடிகராக கருதப்படும் அஜித்தின் தீனா, மங்காத்தா, பில்லா போன்ற படங்கள் அவரின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகும் என செய்திகள் வெளியானது. இதில் மங்காத்தா திரைப்படம் தமிழகத்தில் வெளியாகவில்லை. ஆனால், வெளிநாடுகளில் திரையிடப்பட்டது. தமிழகத்தில் தீனா, பில்லா ஆகிய படங்கள் வெளியானது. இப்படம் வெளியான சென்னை காசி தியேட்டரில் கில்லி பட பேனரை அஜித் ரசிகர் ஒருவர் கிழித்த சம்பவமும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், தீனா திரைப்படம் வெளியாகி 3 நாட்களே ஆகியுள்ள நிலையில் இப்படம் 200 கோடி வசூல் செய்துள்ளதாக அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில், கில்லி படம் போல தீனா படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை என்பது தான் உண்மை. எனவே, இப்படி பொய்யான செய்திகளை அஜித் ரசிகர்கள் கிளப்பி வருகின்றார்கள் என சொல்லப்படுகிறது.

டிடிஎப் வாசனுடன் பீச்சில் குளிக்கும் குக் வித் கோமாளி நடிகை ஷாலின் சோயா…!

Tags :
Advertisement