முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"நான்லா வியாபாரம் ஆகமாட்டேனா உனக்கு."? டைலாக் புகழ் ரெடின் கிங்ஸ்லிக்கு டும் டும் டும்.! இணையதளத்தில் வைரலாகும் திருமண புகைப்படங்கள்.!

02:32 PM Dec 10, 2023 IST | 1newsnationuser4
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லீ. கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். டாக்டர், ஜெய்லர், பத்து தல, காஞ்சுரிங் கண்ணப்பன் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

Advertisement

46 வயதான இவர் தற்போது பிரபல சீரியல் நடிகையான சங்கீதாவை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களது திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து சங்கீதா மற்றும் கிங்ஸ்லி திருமணம் செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது.

இவர் திருமணம் செய்திருக்கும் நடிகை சங்கீதா மாஸ்டர் படத்தில் விஜயின் தோழியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமண புகைப்படங்களை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் நடிகர் சதீஷ்குமார் மணமக்களை வாழ்த்தி பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags :
Cinema comedianKingsleymarriageMasterSangeetha
Advertisement
Next Article