மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்... வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு...! முழு விவரம்
RBL வங்கி அதன் நிலையான வைப்புத்தொகை (FD) வட்டி விகிதங்களை ரூ. 2 கோடிக்கும் குறைவான தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு உயர்த்தி உள்ளது, இது மே 1, 2024 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த திருத்தப்பட்ட விகிதங்கள் மூத்த குடிமக்கள் உட்பட பல முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும்.
RBL வங்கி 18 முதல் 24 மாதங்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு அதிகபட்சமாக 8% வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே காலத்திற்கு, மூத்த குடிமக்கள் கூடுதலாக 0.50% பெறுகிறார்கள், இதன் மூலம் மொத்தம் 8.50% விகிதம் கிடைக்கும். மூத்த குடிமக்கள் (80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) கூடுதல் 0.75% பெறுகிறார்கள், இது அவர்களின் விகிதத்தை 8.75% ஆக உள்ளது.
இது குறித்து RBL வங்கியின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, உங்கள் நிலையான வைப்புத்தொகையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ முன்கூட்டியே திரும்பப் பெற்றால், நீங்கள் முதலில் டெபாசிட் அக்கவுண்ட் திறந்த பொழுது, எவ்வளவு காலம் வைத்திருந்தீர்கள் என்பதைப் பொறுத்து வங்கி உங்கள் வட்டியைக் கணக்கிடும். இருப்பினும், இந்த விகிதத்திற்கு 1% அபராதம் விதிக்கப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மூத்த குடிமக்களுக்கு முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு அபராதம் இல்லை.