மக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!… பொய்யான கடன் விளம்பரங்கள் பார்த்து ஏமாறாதீர்கள்!
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கடன்களை ரத்து செய்வதாக கூறி கடன் வாங்குபவர்களை ஏமாற்றும் கடன் தள்ளுபடி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடன்களை தள்ளுபடி செய்வதாக, இந்த நிறுவனங்கள் அச்சு மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலம் தங்கள் விளம்பரங்களை முழு மூச்சாக செய்து மக்களை கவர்ந்து வருகின்றனர். அதனால் பொதுமக்கள் இந்த தவறான பிரச்சாரங்களுக்கு பலியாகாமல் இருக்கவும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ரிசர்வ் வங்கி கேட்டுக்கொள்கிறது. மேலும் இன்னும் சில கும்பல்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிரச்சாரங்கள்ஐ பல இடங்களில் நடத்தி வருவதையும் ரிசர்வ் வங்கி கவனத்திற்கு வந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுவும் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என தவறான பிரச்சாரங்களுடன் இந்த விளம்பரங்கள் வெளியாகி வருவதால் மக்கள் அதனால் குழப்பத்தை அடைந்து வருகின்றனர்.
இப்படி விளம்பரம் செய்யும் ஆன்லைன் கடன் நிறுவனங்கள் அல்லது நபர்கள் குறித்ஹ்டு தெரிய வந்தால் உடனடியாக வங்கியின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும் மக்களிடம் ரிசர்வ் வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. திங்களன்று வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் கணக்கெடுப்பின்படி, தற்போதைய பொதுப் பொருளாதாரச் சூழ்நிலையில் அதிக அவநம்பிக்கை நிலவுவதால், தற்போதைய வருமானத்தின் மீதான நேர்மறை மாற்றத்தால் வேலைவாய்ப்பில் சமநிலை ஏற்பட்டுள்ளதால், தற்போதைய காலகட்டத்தில் நாட்டில் நுகர்வோர் நம்பிக்கை நிலையாக உள்ளதாகவும் கூறியுள்ளது.