நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டு... ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்...!
ரூ.7,409 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து புதிதாக ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு மே மாதம் 2000 ரூபாய் நோட்டுகளை கடந்த 2023 முதல் திரும்ப பெறப்பட்டது. அக்டோபர் 09, 2023 முதல், ஆர்பிஐ வெளியீட்டு அலுவலகங்கள் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து ரூ.2000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வதற்காகப் பெறத் தொடங்கின.
மார்ச் 1, 2024 நிலவரப்படி, மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்த ரூ.2,000 வங்கி நோட்டுகளில் 97.62 சதவீதம் வங்கியில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி வரை அனைத்து வங்கிகளிலும் ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன. இதன்படி 2,000 ரூபாய் நோட்டுகளில் 97.92 சதவீதம் திரும்ப பெறப்பட்டு உள்ளன. ரூ.7,409 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னமும் பொதுமக்களிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.