For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வசூலிலும் பட்டையை கிளப்பும் ராயன்..!! ரூ.100 கோடி..!! உற்சாகத்தில் படக்குழு..!!

Dhanush's movie Rayan released on 26th and became a mega hit. Now the collection details of the film have been released.
09:19 AM Jul 30, 2024 IST | Chella
வசூலிலும் பட்டையை கிளப்பும் ராயன்     ரூ 100 கோடி     உற்சாகத்தில் படக்குழு
Advertisement

தனுஷின் ராயன் திரைப்படம் கடந்த 26ஆம் தேதி வெளியாகி மெகா ஹிட்டாகியுள்ளது. தற்போது அத்திரைப்படம் குறித்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

Advertisement

பா பாண்டி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் தனுஷ் இயக்கி வெளியிட்டிருக்கும் அவரது இரண்டாவது திரைப்படம் தான் "ராயன்". கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி உலகெங்கும் வெளியாகி மெகா ஹிட் திரைப்படமாக அது மாறியுள்ளது. இயல்பான பழி தீர்க்கும் கதை தான் என்றாலும், அதை இயக்குனர் தனுஷ் கையாண்டிருக்கும் விதமும், அந்த கதைக்கு உயிர் கொடுத்துள்ள ரகுமானின் இசையும் தான் பெரியளவில் பாராட்டு பெற்றது.

தொடர்ச்சியாக "ராயன்" திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வசூல் சாதனையும் புரிந்து வருகிறது. அந்த திரைப்படம் வெளியான 3 நாள்களுக்குள், 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் இணையவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரபல தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வெளியிட்டுள்ள பதிவில், "இயக்குனராகவும் நடிகராகவும் படத்தில் நின்று ஜெயித்திருக்கிறார் தனுஷ்.

அவருக்கு எனது வாழ்த்துக்கள். எஸ்.ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ் மற்றும் அனைத்து பட குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், ராயன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படம்" என்று பதிவிட்டுள்ளார்.

Read More : மாதந்தோறும் நல்ல வருமானம்..!! வட்டியை அள்ளிக் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
Advertisement