சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்..!! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளிலும், 116 ஒருநாள் போட்டிகளிலும், 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், உலகில் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக இருந்தார்.
இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், சர்வதேச டி20 போட்டிகளில் 73 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் அஸ்வின். ஆஸ்திரேலியாவுடனான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3ஆவது போட்டி இன்று டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
சொத்து மதிப்பு : சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினின் நிகர மதிப்பு தோராயமாக ரூ. 200 கோடி. சென்னையில் உள்ள அவரது வீட்டின் மதிப்பு சுமார் 8 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது. அஸ்வினின் ஆண்டு வருமானம் சுமார் 10 கோடிக்கும் மேல் உள்ளது. கிரிக்கெட், யூடியூப் மற்றும் விளம்பரங்கள் மூலம் வருமானம் பெறுகிறார். இது தவிர ஐபிஎல் மூலம் கோடிகளில் சம்பளம் பெறுகிறார்.
அஸ்வின் சென்னையில் அவரது அம்மா, அப்பா, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இரண்டு சொகுசு கார்கள் வைத்துள்ளார். அதில் ஒன்று சுமார் 89 லட்சம் மதிப்பு கொண்ட ஆடி கியூ 7 (Audi Q7). மற்றொன்று ரோல்ஸ் ராய்ஸ் கார். ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் ஆரம்ப விலையே 5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் தனக்கு சொந்தமான ஒரு டிசைனர் பங்களாவில் வசித்து வருகிறார். அது மட்டுமின்றி பல நகரங்களில் அவருக்கு சொத்து உள்ளது.
இதைத் தவிர அஸ்வினுக்கு பல்வேறு வியாபாரம் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. அது குறித்த விவரம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆக மொத்தம் அஸ்வினின் நிகர சொத்து மதிப்பு 200 கோடிக்கு அதிகமாக இருக்கக் கூடும்.
Read more : SBI வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலை.. ரூ.64,480 சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா..?