முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகமே கவனம்...! பொங்கல் அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை...! அரசு பிறப்பித்த உத்தரவு...!

06:10 AM Jan 13, 2024 IST | 1newsnationuser2
Advertisement

வரும் 16-ம் தேதி செவ்வாய்க்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை, முழு நீள கரும்புடன், 1000/- ரொக்கப்பணம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்காக குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு வருகை புரிவதை தவிர்ப்பதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்தது. அரசு அறிவித்தது போல நேற்று ரேஷன் கடைகள் திறக்கப்பட்டது. அதற்கு ஈடாக 16-ம் தேதி செவ்வாய்க்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags :
pongal giftrationration cardration shop
Advertisement
Next Article