மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட ரேஷன் கடைகள்..!! பொருட்கள் எங்கே வாங்குவது..? அமைச்சர் அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கான பொருட்களுக்காக அவதிப்பட்டு வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு வரக்கூடிய காய்கறிகள் புயல் காரணமாக வராத நிலையில், காய்கறிகள் விளையும் உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர சென்னையில் மற்ற பகுதிகளில் ரேஷன் கடைகள் வழக்கம் போல செயல்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அதாவது 11 ரேஷன் கடைகளில் மட்டுமே அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற ரேஷன் கடைகள் மூலமாக தேவையான பொருட்களை மக்கள் பெற்று பயனடையுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.