ரேஷன் அரிசி சாப்பிட்டால் இந்த நோய்கள் வராது... இனி வேஸ்ட் பண்ணாதீங்க..
ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்கள் வழங்கப்படுகிறது. இதில் உள்ள பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகிய பொருள்களை பலர் பயன்படுத்தினாலும், அரிசியை பலர் பயன்படுத்துவது இல்லை. ஏனென்றால், ரேஷன் அரிசியில் எந்த ஒரு சத்தும் இல்லை என பலர் நினைத்துக் கொள்கின்றனர். மேலும் ரேஷன் அரிசியில் சமைத்தால் சாப்பாடு நன்றாக இருக்காது என்றும் சிலர் கூறுவது உண்டு.
ஆனால், தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ரேஷன் அரிசியில் பல நன்மைகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆம், அரிசியில் துத்தநாகம், வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. அதனால் இந்த அரிசியை சாப்பிடும் பெண்களுக்கு ரத்த சோகை குறையும். மேலும் இந்த ரேஷன் அரிசியில், கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் ஆகியவை குறைந்த அளவில் தான் உள்ளது. இதனால் உடல் பருமனை குறைக்க ரேஷன் அரிசி ஒரு சிறந்த தீர்வு.. மேலும், ரேஷன் அரிசியில் அதிகம் உள்ள கார்போஹைட்ரேட், உடலுக்கு எரிபொருளாக செயல்பட்டு மூளை சீராக செயல்பட உதவும்.
ரேஷன் அரிசியில் இத்தனை நன்மைகள் உள்ளது என்றாலும், இது பலருக்கு தெரிவது இல்லை. இதனால் நாம் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி பயன்படுத்துகிறோம். அதிக காசு கொடுத்து வாங்கும் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, உடலுக்கு நன்மையை விட அதிக தீங்கை தான் விளைவிக்கும்.
Read more: ஷாம்பு போட்டு குளிப்பதற்கு முன், கட்டாயம் இதை செய்யுங்க.. இல்லேன்னா பல பிரச்சனை வரும்..