Ration | வந்தாச்சு புதிய ரேஷன் கார்டு..!! பெண்களே ரூ.1,000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க ரெடியா..?
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மகளிருக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில், பல ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு வந்ததாக எஸ்எம்எஸ் சென்றுள்ளது. எனவே, புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள், உடனே மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க முடியுமா? என்பதை தற்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட உடனேயே, அதுவரை ஒரே குடும்பமாக இருந்த பலர், தனி ரேஷன் கார்டு, விண்ணப்பிக்க தொடங்கினார்கள். அதேபோல் புதிதாக திருமணம் ஆனவர்களும், குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்க தொடங்கினார்கள். இதனால் பெரிய அளவில் விண்ணப்பங்கள் அப்போது குவிந்தது. இதையடுத்து, அரசு தற்காலிகமாக விண்ணப்பங்களை நிறுத்தி வைத்தது.
இதற்கிடையே, சரியாக ஓராண்டுக்கு பின்னர் தற்போது பலருக்கும் ரேஷன் கார்டு வந்தாச்சு என்று எஸ்எம்எஸ் பறந்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில, சுமார் 45 ஆயிரம் பேருக்கு ரேஷன் கார்டு வந்துள்ளதாக அரசு எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளது. இவர்கள் புதிய ரேஷன் அட்டைகளை வட்ட வழங்கல் அலுவலகங்களில் தாங்களோ, தங்கள் குடும்ப உறுப்பினர் எவரேனுமோ சென்று பெற்றுக் கொள்ள முடியும்.
இந்நிலையில், புதிய ரேஷன் கார்டு வந்தவர்கள் அடுத்த சில நாட்களில் தாசில்தார் ஆபிஸில் போய் வாங்கி கொள்ள முடியும் என்கிற நிலையில், அடுத்ததாக அவர்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கவே ஆர்வம் காட்டுவார்கள். புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள் மகளிர் உரிமைத்தொகைக்கு நிச்சயம் விண்ணப்பிக்க முடியும். அரசு அனேகமாக புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க விரைவில் அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், உரிமைத்தொகை திட்டத்திற்கு 2024-25ஆம் நிதியாண்டில் 13,720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒரு கோடியே 8 லட்சம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெறும் நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக சுமார் 7 லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வழங்க முடியும். எனவே, சுமார் 7 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்து பயன்பெற முடியும் என்பதால், புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்து அரசு விரைவில் அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது. எனவே, புதிதாக குடும்ப அட்டை வாங்கும் பலருக்கும் மகளிர் உரிமை தொகை கண்டிப்பாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Read More : Tax | ’சொத்து மற்றும் வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு’..!! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!