For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Ration | அரிசி அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

08:15 AM Apr 04, 2024 IST | Chella
ration   அரிசி அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்     வெளியான சூப்பர் அறிவிப்பு
Advertisement

தமிழ்நாட்டில் அரிசி விலை குறைந்துள்ளதால், ரேஷன் கடைகளில் இனி எப்போதும் அரிசி தட்டுப்பாடு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் சில மாதங்களாகவே அரிசியின் விலை பலமடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு காரணம், அத்தியாவசிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டுவரப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனவும், புயல், பருவமழை தவறியது போன்ற காரணங்களால் விளைச்சல் குறைவான காரணத்தினாலும் கடந்த 3 மாத காலத்திற்கு அரிசியின் விலை உயர்ந்து காணப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னையை பொறுத்தவரை கிலோ ரூபாய் 60-க்கு விற்ற புழுங்கல் அரிசி ரூபாய் 68 ஆக உயர்ந்தது. வேகவைத்த அரிசி ரூபாய் 70 ஆக உயர்ந்துள்ளது. பாஸ்மதி அரிசி ரூபாய் 120-க்கும், பழுப்பு அரிசி ரூபாய் 39-க்கு விற்பனை ஆகிறது. இந்நிலையில், தற்போது மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்துள்ளது. அதன்படி, சில மாதங்களாக உயர்ந்த அரிசியின் விலை தற்போது குறைந்து வருகிறதாம்.

அதாவது அரிசிக்கான ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நெல் வரத்து அதிகரித்துள்ளது. கோடை விளைச்சலும் சந்தைக்கு வர தொடங்கி விட்டதால், அரிசியின் விலையில் இனி மாற்றம் தென்பட்டு வரும். அதாவது விலை குறைந்து காணப்படும் என சொல்லப்படுகிறது. அரிசி விலை உயர்ந்த நாட்களில் ரேசன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு ஏதும் வராது என்று ஏற்கனவே அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இதுவரை எந்த ஒரு அரிசி தட்டுப்பாடும் இல்லாமல் சீராக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அரிசி விலை குறைந்துள்ளதால் ரேசனில், இதற்கான தட்டுப்பாடு எப்போதுமே வராது என நம்பப்படுகிறது. அந்த வகையில், ரேஷன் அரிசி அட்டைதாரர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Read More : ’கூட்டணியில் சேர பாஜக மிரட்டியது’..!! ’வங்கிக் கணக்குகளை முடக்கியது’..!! பிரேமலதா விஜயகாந்த் நெத்தி அடி..!!

Advertisement