ரேஷன் அட்டைதாரர்களே..!! இந்த தேதியை நோட் பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!
ஏழை, எளிய மக்களுக்காக அரசு தரப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசின் பல திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஏழை, எளியோருக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே ரேஷன் உதவிகள் கிடைக்கும். கொரோனா காலத்தில் இலவச ரேஷன் வழங்கும் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இத்திட்டத்தின் பலன்கள் கிடைக்கும் என்று மோடி அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் பயன்களைப் பெற பயனாளிகள் ரேஷன் கார்டு வைத்திருப்பது அவசியம். ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு இத்திட்டத்தின் பலன் கிடைப்பதில்லை. இந்நிலையில், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் e-KYC சரிபார்ப்பை முடிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சரிபார்ப்பை முடிக்காதவர்களின் ரேஷன் கார்டுகள் நீக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி அதிகரித்துள்ளதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பயனாளிகள் அருகில் உள்ள பொது விநியோக முறை விற்பனையாளர்களிடம் சென்று கேஒய்சி அப்டேட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : சர்க்கரை நோய் முதல் இதய நோய் வரை..!! இந்த மாவில் செய்த உணவுகளை சாப்பிட்டால் நிச்சயம் வரும்..!! எச்சரிக்கை..!!