ரேஷன் அட்டைதாரர்களே..!! அக்.31ஆம் தேதியே கடைசி..!! உடனே இந்த வேலையை முடிச்சிருங்க..!!
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மத்திய, மாநில அரசுகளின் பல திட்டங்களும் ரேஷன் கார்டுகள் மூலமாக மக்களை சென்றடைகிறது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை போன்ற பல்வேறு திட்டங்களுக்கு ரேஷன் கார்டுகள் மிகவும் முக்கியம். இந்நிலையில், தற்போது ரேஷன் கார்டுகளில் KYC சரிபார்ப்பை முடிப்பது அவசியம் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை முன்னதாக கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், பலர் இந்த செயல்பாட்டினை முடிக்காததால் கால அவகாசம் அக்டோபர் 31 வரை நீடிக்கப்பட்டது. தற்போது 10 நாட்கள் மட்டுமே இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்க கால அவகாசம் உள்ளது. இதனை ஆன்லைன் சென்டரில் சென்று எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இல்லையென்றால், https://tnpds.gov.in/ என்ற இணையதள முகவரிக்குள் சென்றும் அப்டேட் செய்யலாம். அக்டோபர் 31ஆம் தேதிக்குள் இகேஒய்சி அப்டேட்டை சரிபார்க்காவிட்டால், அவர்களுடைய ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்பதால் உடனடியாக பொதுமக்கள் இந்த பணியை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : ”கழகத்திற்காக ஓடோடி உழைத்த கழகப் போராளி”..!! தவெக நிர்வாகி மறைவுக்கு விஜய் இரங்கல்..!!