ரேஷன் அட்டை வச்சிருக்கீங்களா.? உங்களுக்கு தான் இந்த செய்தி.. ரெடியா இருங்க.! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு.!
ரேஷன் கடைகளின் மூலமாக மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான அரிசி பருப்பு சீனி பாமாயில் போன்றவை சலுகை விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசு வழங்கும் சிறப்பு பரிசுகள் மற்றும் நிவாரணத் தொகை போன்றவையும் ரேஷன் அட்டைகளின் அடிப்படையில் எனக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் அட்டைகளின் மூலம் பல லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் ரேஷன் அட்டைகள் அத்தியாவசியமான ஆவணமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ரேஷன் கார்டு முதலிடம் பெறுகிறது. ரேசன் அட்டைதாரர்களின் குறை தீர்ப்பதற்கும் ரேஷன் அட்டைகளில் இருக்கும் பிழைகளை சரி செய்யவும் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் செல்போன் எண்களை அப்டேட் செய்தல் போன்றவை தொடர்பான முகாம்களை தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது .
மேலும் ரேஷன் கார்டில் பிழை இருந்தால் அரசு வழங்கும் நிவாரண உதவிகளை பெற முடியாது என அறிவித்திருப்பதால் பொதுமக்கள் ரேஷன் குறை தீர்ப்பு முகாமை பயன்படுத்தி தங்களது ரேஷன் கார்டை அப்டேட் செய்து கொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு சார்பாக வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி ரேஷன் குறை தீர்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
இந்த முகாம்களில் செல்போன் எண்கள் அப்டேட் செய்தல் மற்றும் பயோ மெட்ரிக் அப்டேட் ஆகியவற்றை செய்து கொள்ளலாம். மேலும் ரேஷன் கடை ஊழியர் மற்றும் ரேஷன் பொருட்கள் தொடர்பான புகார்கள் குறித்து தெரிவிக்கலாம் என அரசு அறிவித்திருக்கிறது. இந்த சிறப்பு முகாம் சென்னை மண்டல உதவி ஆணையர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறும் என தெரிவித்துள்ளது. இந்த முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணி வரை நடைபெற இருக்கிறது.