Ration | குடும்ப உறுப்பினர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் கைரேகை வைக்க முடியுமா..? மக்களே தெரிஞ்சிக்கோங்க..!!
இந்தியாவில் பொதுவிநியோகத் திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தும் மாநிலங்களில் முக்கியமானது தமிழ்நாடு. இங்கு, கோடிக்கணக்கான மக்கள் சரியான முறையில் தங்களுக்கான அரிசி பருப்பு முதல், உதவி தொகை வரை அனைத்தையும் பெறும் இடமாக ரேஷன் கடைகள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகளுக்கு உணவு பொருட்கள் வழங்க 34,793 ரேஷன் கடைகள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் கூட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன.
இதற்கிடையே, அந்தந்த குடும்ப உறுப்பினர்களுக்குத்தான் அரசின் மானியம் சென்று சேர்கிறதா என்பதை அறிய விரும்பிய அரசு, அதற்காக வங்கிகளை போல் கே.ஒய்.சி. முறையை கையில் எடுத்துள்ளது. அதுதான் கைரேகை பதிவு முறை. அதன்படி, நியாய விலை கடைகளில் பயனாளிகளின் விவரங்களை முழுமையாக பதிவு செய்து கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு தற்போது தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக ரேஷன் அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சுய விவரங்களை வெள்ளைத்தாளில் அளிப்பதுடன் விரல் ரேகை சரிபார்ப்பை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, குடும்ப அட்டையில் கைரேகை இணைக்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்றும், குடும்ப உறுப்பினர் பெயர் நீக்கப்படும் என்றும் சமூக ஊடங்களில் வேகமாக வதந்தி பரவியது. இதை திட்டவட்டமாக அரசு மறுத்தது.
மேலும், ரேஷன் அட்டைதாரரின் குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்படவில்லை எனில், அவர்களின் பெயர் நீக்கம் செய்யப்படும் என்றோ, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படாது என்றோ தவறான தகவல்களை ரேஷன் ஊழியர்கள் சொல்லக்கூடாது என்றும் அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், வெளியூர் ரேஷன் கார்டு வைத்து சென்னையில் வசிக்கும் மக்கள் இதுவரை கைரேகை வைக்காமல் பலர் இருக்கின்றனர். அவர்களால், சென்னையிலேயே கைரேகை வைக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி சென்னை மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பெண் ஒருவர் வந்து கேள்வி எழுப்பினார்.
Read More : Annamalai | உதயநிதி முதல் திருமாவளவன் வரை..!! அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச்..!! அதிர்ச்சியில் திமுக தலைமை..!!
அதற்கு கடையில் பணியாற்றும் ஊழியர் கூறுகையில், உங்களுக்கு எந்த ஊரில் ரேஷன் கார்டில் பெயர் உள்ளதோ அந்த ஊரில் மட்டுமே கைரேகை வைக்க முடியும். அதுவும் உங்கள் கார்டு எந்த கடையில் உள்ளதோ அந்த கடையில் மட்டுமே கைரேகை வைக்க முடியும். நீங்கள் சென்னையில் எல்லாம் கைரேகை வைக்க முடியாது என்றார். எனவே, சென்னையில் உள்ள வெளியூர் கார்டு வைத்துள்ள மக்கள் சொந்த ஊரில் போய் மட்டுமே ரேஷன் கார்டுக்கு கைரேகை வைக்க முடியும். இதற்கிடையே, குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க இ-சேவை மையங்கள் தபால் நிலையங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதேபோல் கைரேகை பதிவு செய்யவும் பலர் ஆர்வமுடன் தபால் நிலையங்களுக்கு சென்று வருகின்றனர்.
English Summary : Fingerprint of family members at ration shop