பரபரப்பு.! வெளியானது ரத்தன் டாடா டீப் ஃபேக் வீடியோ.! இன்ஸ்டாகிராமில் மறுப்பு பதிவு.!
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதோடு பல்வேறு அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தாலும் அவற்றை தவறான முறையில் பயன்படுத்துவது மிகப்பெரிய எதிர் விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற எதிர் விரைவுகளின் ஓர் அங்கம் தான் டீப் ஃபேக்.
தற்போது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லப்படும் தகவல் தொழில்நுட்பம் ஐடி துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவரது உருவம் மற்றும் குரல் ஆகியவற்றை இப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் டிசைனிங் மற்றும் வீடியோ கிரியேட்டிங்கில் பல புரட்சிகள் ஏற்பட்டாலும் இதனை தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
இந்த தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி சமீபத்தில் நடிகைகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது டாட்டா நிறுவனத்தின் அதிபர் ரத்தன் டாடாவை பற்றியும் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோவிற்கு மறுப்பு தெரிவித்து இருப்பதோடு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ரத்தன் டாடா ஒரு புதிய ப்ராஜெக்ட் தொடர்பாக தன்னுடைய நிறுவனத்தில் பொதுமக்கள் பணத்தை செலுத்தும் படி பேசுவது போன்ற ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவில் தான் பேசவில்லை என்றும் டீப் ஃபேக் முடையில் இந்த வீடியோ மக்களை ஏமாற்றுவதற்காக வெளியிடப்பட்டிருக்கிறது எனவும் தனது சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்து இருக்கிறார் ரத்தன் டாடா.