முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பட ப்ரோமோஷன் விழாவிற்கு நொண்டி நொண்டி வந்த ராஷ்மிகா மந்தனா.. நயந்தாராவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!! என்னாச்சு..?

Rashmika Mandhana came to the film promotion function with leg injury..
01:28 PM Jan 23, 2025 IST | Mari Thangam
Advertisement

நடிகை ராஷ்மிகா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக மாறி இருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் கிட்டத்தட்ட 2000 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது. அடுத்து அவர் Chhaava என்ற ஹிந்தி படத்தில் நடித்து இருக்கிறார். அதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு சிவப்பு நிற உடையில் அழகாக வந்திருந்தார் ரஷ்மிகா.

Advertisement

சமீபத்தில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்யும் போது அவருக்கு காலில் அடிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வந்த ராஷ்மிகா மந்தனா ஒற்றை காலில் குதித்து குதித்து மேடைக்கு வந்தார். அதை பார்த்த விக்கி கௌஷல் வேகமாக வந்து ரஷ்மிகாவின் கையை பிடித்து அவருக்கு உதவி செய்தார். மேலும் அவரை இருக்கையில் அமர வைத்துவிட்டு அதன் பிறகு தன் இருக்கையில் அமர்ந்தார்.

https://twitter.com/i/status/1882082317407273354

இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. மேலும், நடக்க முடியாவிட்டாலும் படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டதற்கு இணையத்தில் பலரும் ராஷ்மிகாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், ரஷ்மிகா செய்ததை பார்த்துவிட்டு நயன்தாராவை விமர்சிக்கிறார்கள் சினிமா ரசிகர்கள். ஒரு பயனர், காலில் பிரச்சனை இருந்தும் ஒத்த காலில் குதித்து குதித்து வந்த ரஷ்மாக எங்கே, நல்லா இருந்தாலும் கூட பட விழாக்களுக்கு வராத நயன்தாரா எங்கே. படத்தில் நடித்தால் மட்டும் போதாது அதை விளம்பரம் செய்யவும் வர வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

மற்றொரு பயனர், ராஷ்மிகா வந்ததுக்கும், நயன்தாரா வராததுக்கும் என்ன தொடர்பு?. நான் படத்தில் நடிப்பதோடு சரி விளம்பரம் செய்ய வர மாட்டேன் என சொல்லிவிட்டு தான் நடிக்கிறார் நயன்தாரா. தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் சரி என சொல்லியே நயன்தாராவை ஒப்பந்தம் செய்கிறார்கள். நயன்தாரா வராதது அவர்களுக்கே பிரச்சனை இல்லை. உங்களுக்கு என்ன வந்தது என்கிறார்கள்.

Read more ; சர்க்கரை நோயாளிகள் இந்த பானத்தை குடித்தால் போதும்.. சுகர் அளவு ஏறவே ஏறாது..!

Tags :
nayanthararashmika mandhana
Advertisement
Next Article