முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'சுழற்றியடித்த சூறாவளி' வேரோடு சாய்ந்த மரங்கள்..!! சுக்கு நூறான கார்கள்!! அச்சத்தில் நியூ ஜெர்சி!!

The tornado, which reached speeds of up to 129 kmph mph, knocked down several trees and overturned half a dozen vehicles, according to the National Weather Service. No injuries were reported.
10:43 AM Jun 16, 2024 IST | Mari Thangam
Advertisement

மணிக்கு 129 கிமீ வேகத்தில் வீசிய சூறாவளியால் பல மரங்கள் வேரோடு சாய்ந்து கார்களின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியதாக தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.

Advertisement

நியூ ஜெர்சியின் மெர்சர் கவுண்டியில் வெள்ளிக்கிழமை மாலை கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை நீடித்து கொண்டிருந்தது. இந்நிலையில், மணிக்கு 129 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றினால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தது. லாரன்ஸ் டவுன்ஷிப்பில்  பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களின் மீது மரங்கள் விழுந்ததில் முற்றிலும் சேதமானதாக தேசிய வானிலை சேவை அறிவித்துள்ளது. இந்த சூறாவளி காற்றினால் இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என குறிப்பிட்டது.

லேண்ட்ஸ்பவுட் சூறாவளி வகையை சேர்ந்த இந்த சூறாவளியானது, மிகவும் வேறுபட்டது. இடியுடன் கூடிய மழையிலிருந்து உருவாகாமல், தரையில் இருந்து உருவாகின்றன. அவற்றின் சிறிய அளவு மற்றும் நிலையான ரேடார் வரம்பிற்குக் கீழே உள்ள உருவாக்கத்தால் அவற்றைக் கணிப்பதும், கண்டறிவது கடினம்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, “பென்சில்வேனியாவின் பக்ஸ் கவுண்டியில் புயல்களிலிருந்து வெளியேறும் காற்று கிழக்கு நோக்கிய கடல் காற்றுடன் மோதியதால் சூறாவளிக்கு காரணமான சுழல் ஏற்பட்டது. மாநிலத்தில் அடுத்த வாரத்திற்கான வெப்ப அலை முன்னறிவிப்புக்கு சற்று முன்னதாகவே வானிலை நிகழ்வு வந்துள்ளது” என்றனர்.

Read more ; பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் விலை ரூ.10.20 குறைப்பு!! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!!

Tags :
Lawrence TownshipMercer Countynew jerseyRare tornadouproots trees
Advertisement
Next Article