பள்ளியில் பலாத்காரம்..!! கல்லூரியில் குழந்தை பெற்றெடுத்த மாணவி..!! ஆசிரியர் செய்த கேவலமான செயல்..!!
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்தாண்டு 17 வயது மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு படித்து வந்தர். தற்போது, அந்த மாணவி சென்னையில் செயல்படும் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் படித்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு, மாணவிக்கு திடீரென குழந்தை பிறந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், கர்ப்பமானதற்கான காரணம் குறித்து மாணவியிடம் கேட்டுள்ளனர். அப்போது, மாணவி கூறிய பதில் பெற்றோரை அதிர்ச்சியில் உறையவைத்தது. அதாவது, பள்ளியில் படிக்கும் போது வேதியியல் ஆசிரியர் பலாத்காரம் செய்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகாரளித்தனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணத்தில், மாணவி பள்ளியில் படிக்கும் போது, வேதியியல் ஆசிரியர் மலர் செல்வம் (50) என்பவர் மாணவியிடம் நட்பாக பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மாணவியை ஏமாற்றி தனிமையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வந்த மாணவி கர்ப்பமடைந்து குழந்தை பெற்றுள்ளார்.
இதையடுத்து, தற்போது பள்ளியின் உதவி தலைமையாசிரியராக பணியாற்றி வரும் மலர் செல்வத்தை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பதவி உயர்வு பெற்று உதவி தலைமையாசிரியர் பொறுப்பில் இருந்த மலர் செல்வம் திருமணமாகி மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் வசித்து வந்தார். இதற்கிடையில், மலர் செல்வம் மாணவியை பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கி தற்போது குழந்தை பிறந்ததற்கு காரணம் என்பது உறுதி செய்யப்பட்டதால், அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.