For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நகைக்கு ஆசைப்பட்டு பலாத்காரம்..!! இரும்பு கம்பியால் அடித்துக் கொலை..!! கொழுந்தனால் அண்ணிக்கு நேர்ந்த சோகம்..!!

The court has sentenced a fat man who raped and murdered his sister-in-law in a fit of rage and sentenced him to life imprisonment.
11:58 AM Aug 28, 2024 IST | Chella
நகைக்கு ஆசைப்பட்டு பலாத்காரம்     இரும்பு கம்பியால் அடித்துக் கொலை     கொழுந்தனால் அண்ணிக்கு நேர்ந்த சோகம்
Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மூத்த சகோதரர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கணவர் வெளிநாட்டில் இருந்ததால், 28 வயதாகும் அவரது மனைவி, தாய் வீட்டிலும், கணவர் வீட்டிலும் மாறி மாறி வசித்து வந்தார். இந்நிலையில், பெண்ணின் மாமியாரும், கொழுந்தனும் கருங்கல் அருகே சொந்த வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 2011இல் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தாளக்குடி பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அப்பெண் படுகாயங்களுடன் சடலமாக கிடந்தார்.

Advertisement

இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கணவரின் சகோதரரால் பெண் கொல்லப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொழுந்தனுக்கு, அண்ணியின் நகைகளை அபகரிக்கும் எண்ணம் இருந்து வந்துள்ளது. இதற்கான சரியான தருணத்திற்காக காத்திருந்தார்.

இந்நிலையில், அண்ணிக்கு கடன் பிரச்சனை ஏற்பட்டு, தனியார் வங்கியில் நகைகளை அடகு வைத்துள்ளார். வெளிநாட்டில் இருந்து கணவர் பணம் அனுப்பும் போது, ​​நகையை திருப்பிவிடலாம் என நினைத்திருந்தார். அதன்படி, வெளிநாட்டில் இருந்து கணவர் பணம் அனுப்ப, நகையை திருப்ப மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார் அண்ணி. பின்னர், வங்கியில் வைத்திருந்த நகையை திரும்ப பெற்றுக் கொண்டார். அண்ணி நகைகளைத் திருப்பியதை அறிந்த கொழுந்தன், தான் ஓட்டி வந்த வாடகைக் காரில் அண்ணியை அவரது தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

பின்னர், மறைவான இடத்தில் காரை நிறுத்திவிட்டு, காரில் இருந்த கம்பியால் அண்ணியின் தலையில் அடித்துள்ளார். இதையடுத்து, மயங்கி விழுந்த அண்ணியை காரில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். பின் அவரை கொன்றுவிட்டு உடலை ஆரல்வாய்மொழி அருகே உள்ள சுடுகாட்டில் வைத்துவிட்டு நகைகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்த வழக்கு நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குற்றவாளி கொழுந்தனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சுந்தரையா தீர்ப்பளித்தார். மேலும், அவருக்கு ரூ.3,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

Read More : நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! தமிழ்நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை..!!

Tags :
Advertisement