ஹரியானா தேர்தல்.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரஞ்சித் சிங் சவுதாலா..!! என்ன விவகாரம்?
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் ( இசிஐ ) வெளியிட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைக்கு மூன்று கட்டங்களாகவும், ஹரியானாவில் ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் வாக்காளர்கள் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 ஆகிய தேதிகளில் வாக்களிப்பார்கள், மேலும் மூன்றாம் கட்டம் ஹரியானாவுடன் அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ஹரியானா கேபினட் அமைச்சர் சவுத்ரி ரஞ்சித் சிங் சவுதாலா கேபினட் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ரஞ்சித் சிங் சவுதாலாவுக்கு ராணியா சட்டசபையில் சீட் வழங்காததால் பாஜக மீது கடும் அதிருப்தியில் இருந்தார். இதனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து, சவுதாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் ராணியா சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் போட்டியிடுவேன். தப்வாலி தொகுதியில் போட்டியிட பாஜக எனக்கு முன்வந்தது, ஆனால் நான் மறுத்துவிட்டேன். ரோட் ஷோ மூலம் எனது பலத்தைக் காட்டுவேன். வேறு சில தொகுதிகளில் நான் போட்டியிடலாம். கட்சி அல்லது சுயேட்சை வேட்பாளராக இருந்தாலும், நான் நிச்சயமாக போட்டியிடுவேன். எனக் கூறியிருந்தார்.
Read more ; பண்டிகைய கொண்டாடுங்களே.. செப்டம்பர் 17 பொது விடுமுறை..!! தமிழக அரசு அறிவிப்பு..