Wanted: ராமலிங்கம் கொலை வழக்கு...! தலா ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு தொகை அறிவித்த NIA...!
2019 ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளிகளை தேடும் முயற்சியை தீவிரப்படுத்தி, கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 5 நபர்களை பிடிக்க உதவுபவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது .
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை போஸ்டர்களை ஒட்டி உள்ளது. மத்திய ஏஜென்சி இதுவரை 19 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கொலை வழக்கு தொடர்பாக முகமது அலி ஜின்னா (34), அப்துல் மஜித் (37), புர்கானுதீன் (28), ஷாகுல் ஹமீது (27), மற்றும் நஃபீல் ஹாசன் (28) ஆகிய நபர்களை தேசிய புலனாய்வு முகமை தேடி வருகிறது.
கும்பகோணத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (48), பாமகவின் திருபுவனம் நகரச் செயலராக இருந்து வந்தார், பிப்ரவரி 5, 2019 அன்று வெட்டிக் கொல்லப்பட்டார். NIA தனது குற்றப்பத்திரிகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளது. சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு உண்மை அறிவித்துள்ளது. தற்பொழுது இது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.