Ramadan Fasting | தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா ரமலான் நோன்பு..? வெளியான பரபரப்பு தகவல்..!!
சவூதி அரேபியாவில் நேற்று பிறை தென்பட்ட நிலையில், இன்று (மார்ச் 11) முதல் அங்கு ரமலான் நோன்பு துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9-வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பார்கள். நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சாப்பிட்ட பின்னர் சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நோன்பு கடைபிடிப்பார்கள். பிறை கணக்குபடி 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் வழக்கம்.
ரமலான் நோன்பு காலத்தில் உணவு உண்ணாமல், நீர் பருகாமல் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள், மாலையில் நோன்பு கஞ்சி சாப்பிட்டு நோன்பை முடிப்பார்கள். மேலும், இப்தார் விருந்து உண்பதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிறை பார்த்தே நோன்பு கடைப்பிடித்தலை இஸ்லாமியர்கள் தொடங்குவார்கள். சவூதி அரேபியாவில் நேற்று (மார்ச் 10) ரமலான் பிறை பார்க்கும் நிகழ்வு நடந்தது. அதன்படி, சவூதி அரேபியாவில் பிறை தென்பட்டுள்ளது. இதனால் இன்று (மார்ச் 11 - திங்கட்கிழமை) முதல் ரமலான் மாதம் நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாளை (மார்ச் 11) ரமலான் மாதத்தின் முதல் நாள் என்றும் சவுதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சவுதி அரேபியாவையே பின்பற்றும் என்பதால், குவைத், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் இன்று முதல் ரமலான் நோன்பு ஆரம்பம் ஆகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, பொதுவாக சவூதி அரேபியாவுக்கு மறுநாள் ரமலான் நோன்பு தொடங்கும். எனவே, வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) இங்கு ரமலான் தொடங்க வாய்ப்புள்ளது. இருப்பினும் பிறை பார்த்தே ரமலான் நோன்பு அறிவிப்பு வெளியாகும்.
Read More : PM Modi | தமிழ்நாட்டில் மீண்டும் புயலை கிளப்ப வரும் பிரதமர் மோடி..!! இந்த டைம் பிளானே வேற..!!