For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ராம நவமி!… விஷ்ணுவின் அருள் கிடைக்க!… பார்வதி தேவியிடம் சிவபெருமான் என்ன சொன்னார் தெரியுமா?

07:20 AM Apr 17, 2024 IST | Kokila
ராம நவமி … விஷ்ணுவின் அருள் கிடைக்க … பார்வதி தேவியிடம் சிவபெருமான் என்ன சொன்னார் தெரியுமா
Advertisement

Rama Navami: விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராமரின் பிறப்பை நினைவுகூரும் ராம நவமி நீதி, ஒழுக்கம் மற்றும் கருணையின் நாளாக போற்றப்படுகிறது. இந்த சிறப்பான தினத்தில் ராமரின் பிறந்தநாளை கொண்டாட அவரது பக்தர்கள் ராமர் கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர். ராம நவமியின் புனித திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சைத்ரா மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் ஒன்பதாம் நாளில் கொண்டாடப்படுகிறது.

Advertisement

சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாள் புதன்கிழமையான இன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விரதம் இருந்து ராம நாமம் உச்சரித்தால் ராமரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ராமாயண கதை, ராமரின் புகழை போற்றும் கதைகளையும் படிப்பதும், கேட்டதும் நன்மை அளிக்கும். 108, 1008 என்ற கணக்கில் ஸ்ரீ ராம ஜெயம் எழுத வேண்டும். ஸ்ரீ ராம நாமத்தை இடை விடாது ஜெபித்து கொண்டே இருக்க வேண்டும். இந்த ஆண்டு ராம நவமி அன்று, மிக முக்கியமான யோகம் உருவாகிறது, அது ரவி யோகமாக இருக்கும். இந்த யோகத்தில் சூரியனின் தாக்கம் உள்ளது. இந்நேரத்தில் வழிபடுவதால் நோய்கள், தோஷங்கள், துன்பங்கள் நீங்கும்.

அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு, வீட்டில் உள்ள ராமர் படத்தை சுத்தம் செய்து துளசி மாலை அணிவிக்க வேண்டும். ராமர் பட்டாபிஷேக படம் இருந்தால் இன்னும் சிறப்பானது. நைவேத்தியமாக பால் பாயசம், பானகம், நீர் மோர், துளசி தீர்த்தம், கற்கண்டு வைத்து படைக்கலாம். உணவு வகைகளில் புளியோதரை, வடை, எலுமிச்சை சாதம் படைத்து வழிபடலாம். அனைத்தும் செய்ய முடியாதவர்கள் ஒரு கடைபிடியளவு கற்கண்டு, துளசி இலை, பானகம் மட்டும் கண்டிப்பாக வைத்து படைக்க வேண்டும்.

ராம நவமி நாளில் ராமாயணம், சுந்தர காண்டம், விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கலாம். ராமரை போற்றும் பாடல்களை பாடி வழிபடலாம். எதுவும் முடியாதவர்கள் ஸ்ரீ ராம ஜெயம் என தொடர்ந்து பாராயணம் செய்யலாம். ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை 108 முறை எழுதலாம் அல்லது சொல்லலாம். ஸ்ரீ ராம ஜெயம் என்று சொல்வதை விட ஸ்ரீ சீதா ராம ஜெயம் என சொல்வது சிறப்பானது. இதனால் ராமர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய மூன்று பேரின் அருளும் கிடைக்கும்.

"ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே" என்ற மந்திரத்தை சொன்னாலே விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதையும் பாராயணம் செய்த பலன் கிடைத்து விடும் என சிவ பெருமானே, பார்வதி தேவியிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

" ஓம் தஸரதாய வித்மஹே
ஸீதாவல்லபாய தீமஹி
தந்நோ ராமஹ் ப்ரசோதயாத் " என்ற ஸ்ரீ ராம காயத்ரி மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை பாராயணம் செய்யலாம். இப்படி செய்வதால் ஸ்ரீ ராம பிரானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

Readmore: Covai: CM ஸ்டாலின் மீது FIR போட்டு உள்ளே தள்ள வேண்டும்…! அண்ணாமலை அதிரடி கருத்து…!

Advertisement