For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ராம மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்...! 12:20 முதல் 12:45 மணி வரை வீடுகளில் ஓதலாம்...!

05:50 AM Jan 22, 2024 IST | 1newsnationuser2
ராம மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்     12 20  முதல் 12 45 மணி வரை வீடுகளில் ஓதலாம்
Advertisement

இன்று நண்பகல் 12 மணியளவில் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் ஸ்ரீ ராம் லல்லாவின் (குழந்தை ராமர்) பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அதே போல வரலாற்று சிறப்புமிக்க பிராண பிரதிஷ்டை விழாவில் நாட்டின் அனைத்து முக்கிய ஆன்மீக மற்றும் மத பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். பல்வேறு பழங்குடியின சமூகங்களின் பிரதிநிதிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

Advertisement

பகவான் சிவனின் பழமையான ஆலயம் புதுப்பிக்கப்பட்டுள்ள குபேர திலாவையும் பிரதமர் பார்வையிடுவார். புதுப்பிக்கப்பட்ட இந்த கோவிலில் அவர் பூஜை மற்றும் தரிசனம் செய்யவுள்ளார். பிரமாண்டமான ஸ்ரீ ராம் ஜென்மபூமி ஆலயம், பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் (கிழக்கு-மேற்கு) 380 அடி; அகலம் 250 அடி; உயரம் 161 அடி; மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 கதவுகளால் இது கட்டப்பட்டுள்ளது.

கோயிலின் தூண்கள் மற்றும் சுவர்கள் இந்து தெய்வங்கள், கடவுள்கள் மற்றும் தேவியர்களின் நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்களைக் கொண்டுள்ளன. தரை தளத்தில் உள்ள பிரதான கருவறையில், பகவான் ஸ்ரீ ராமரின் குழந்தை பருவ வடிவம் (ஸ்ரீ ராம் லல்லாவின் சிலை) வைக்கப்படுகிறது.

இன்று வீட்டில் பூஜை எப்படி செய்வது...?

வீட்டில் உள்ள பூஜை அறையை முதலில் முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். பின்பு வீட்டில் உள்ள நபர்களுகும் குளித்து தங்களை சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்தெய்வீக இணைப்பின் சின்னமாக நறுமணமிக்க சந்தன பொட்டினை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்இந்த புனிதமான சந்தர்ப்பத்தில் நீங்கள் தேடும் மன அமைதியை பிரதிபலிக்கும் விதமாக புதிய, வெளிர் நிற ஆடைகளை அணிந்து பூஜை செய்ய வேண்டும்.

தெய்வீக ஆசீர்வாதங்களைத் தூண்ட மஞ்சள் மற்றும் குங்குமம் கொண்டு கலசத்தை அலங்கரியுங்கள். பின்னர் கலசத்தின் வாய்பகுதியில் முழு தேங்காயை வைத்து, கலசத்தை சுற்றி பழங்களை வைக்கவும்.ஓம் ராம் ராமாய நம" என்ற ராம மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். ராமருக்கு வெற்றி' என்று பொருள்படும் ”ஓம் ராம் ராமாய நமஹ்' மந்திரத்தை, குடமுழுக்கு விழா நடைபெறும் இன்று பிற்பகல் மதியம் 12:20 மணி முதல் 12:45 மணி வரை வீடுகளில் ஓதலாம்.

Tags :
Advertisement