நாளை முதல் பொது மக்களுக்காக திறக்கப்படும் ராமர் கோயில்..! ஆரத்தி, தரிசன நேரம் மற்றும் பிற விவரங்கள்..!
அயோத்தி நகரில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்திய மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு சடங்குகளுடன் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார் பிரதமர் மோடி.
நூற்றாண்டு சிறப்புமிக்க இந்த நிகழ்வில் 7,000-திற்கும் அதிகமான சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களின் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் இந்த விழாவை கண்டு ரசித்தனர். இந்நிலையில் நாளை முதல் ராமர் கோயில் பொதுமக்களுக்காக திறக்கப்படுகிறது. நாளை முதல் பொதுமக்கள் குழந்தை ரம்மரை தரிசிக்கலாம்.
அயோத்தி ராமர் கோயிலின் ஆரத்தி மற்றும் தரிசன நேரங்கள்:
1.ஜனவரி 23, 2024 செவ்வாய்க்கிழமை முதல் பக்தர்கள் ராமர் கோயிலுக்குச் செல்லலாம்.
2.மக்கள் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பிரார்த்தனை செய்யலாம்.
3.கோயிலில் ஆரத்தி இரண்டு முறை நடைபெறும். ஒன்று காலை 6:30 மணிக்கும், இரண்டாவது மாலை 7:30 மணிக்கும் நடைபெறும்.
4.பக்தர்கள் தரிசனத்திற்கான பாஸ்களை ஆன்லைனிலும் ஆஃப்லைன்களிலும் பெறலாம்.
ராம் மந்திர் ஆரத்தி தரிசனத்திற்கான பாஸ் பெறுவது எப்படி:
1.பக்தர்கள் அயோத்தி ராமர் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க வேண்டும்.
2.அவர்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழையலாம்.
3.உள்நுழைந்த பிறகு, பக்தர்கள் ஆரத்தி அல்லது தரிசனத்திற்கு விருப்பமான ஸ்லாட்-ஐ தேர்வு செய்யலாம்.
4.இணையதளத்தில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்கவும்.
5.அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்த பிறகு, பக்தருக்கு உறுதிப்படுத்தல் சீட்டு அனுப்பப்படும்.
6.பக்தர்கள் நுழைவதற்கு முன், கோவில் கவுன்டரில் இருந்து பாஸ் வாங்க வேண்டும்.