முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ராமர் கோயில் கும்பாபிஷேகம்..!! தமிழக கோயில்களில் கடும் கட்டுப்பாடு விதிப்பு..?

01:25 PM Jan 21, 2024 IST | 1newsnationuser6
Advertisement

நாட்டின் புனித நகரங்களில் ஒன்றான அயோத்தியில் நாளை ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழக கோவில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நிகழ்ச்சியையும் நடத்த அனுமதிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும், பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்றும் காவல்துறையினர் தடுப்பதாகவும் கூறப்பட்டது.

Advertisement

ஒட்டு மொத்த நாடே அயோத்தி விழாவை எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் அறநிலையத்துறை இப்படி தடை விதித்திருப்பது பக்தர்களை மட்டுமின்றி கோவில் நிர்வாகிகளையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக தரப்பில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் ஆலய நடைமுறைகளில் தேவையில்லாமல் தலையிடவோ, வழிபடும் முறைகளில் குறுக்கிடவோ திமுக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை எனக்கூறி கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக இந்து அறநிலைத்துறை சார்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் நாளை பூஜை செய்ய அறநிலையத்துறை அனுமதி மறுத்துள்ளதாக வெளியான தகவல் தவறானது. அதுபோன்று எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
இந்து சமய அறநிலையத்துறைகும்பாபிஷேகம்தமிழக கோயில்கள்ராமர் கோயில்
Advertisement
Next Article