For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ராமர் கோயில் கும்பாபிஷேகம்..!! தமிழ்நாட்டிற்கும் நாளை பொது விடுமுறை கொடுங்க..!! ஓபிஎஸ் கோரிக்கை..!!

04:10 PM Jan 21, 2024 IST | 1newsnationuser6
ராமர் கோயில் கும்பாபிஷேகம்     தமிழ்நாட்டிற்கும் நாளை பொது விடுமுறை கொடுங்க     ஓபிஎஸ் கோரிக்கை
Advertisement

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்துக்கள் வணங்கும் தெய்வமான பகவான் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்திய நாட்டு மக்களின் விருப்பமாக இருந்த நிலையில், தற்போது அவருக்கு அவருக்கு பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது.

இந்த விழாவில், இந்திய மக்களின் தெய்வீகக் கனவை நிறைவேற்றிய பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இந்த மிகப் பிரம்மாண்டமான திருக்கோயில் திறப்பு விழாவினை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விடுமுறை அளித்துள்ளன.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடையே மேலோங்கியுள்ளது. எனவே, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், நாளை அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement