முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ராமர் கோயில் கும்பாபிஷேகம்..!! இதை கண்டிப்பா பண்ணுங்க..!! அமைச்சர்களுக்கு உத்தரவுபோட்ட பிரதமர் மோடி..!!

05:40 PM Jan 18, 2024 IST | 1newsnationuser6
Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், ஆன்மீக துறவிகள் கலந்து கொள்ள உள்ளனர். அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, 11 நாள் விரதத்தை மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

இந்நிலையில், நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி, திருச்சி ஸ்ரீரங்கம் செல்கிறார். அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு சாமி தரிசனம் செய்கிறார். பிற்பகலில் ராமேசுவரத்திற்குச் செல்லும் பிரதமர் மோடி புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடுகிறார். பிறகு மீண்டும் ராமேஸ்வரம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார். பிறகு கார் மூலம் அரிச்சல்முனைக்கு சென்று, கோதண்டராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார். பின்னர் கடலில் புனித தீர்த்தங்களைச் சேகரிக்கும் அவர், புனிதநீர் கலசங்களுடன் டெல்லி புறப்படுகிறார்.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வையொட்டி, தனது அமைச்சரவை சகாக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் பிரதமர் மோடி. அதாவது, கும்பாபிஷேக நிகழ்வையொட்டி, தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வணங்குமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், ஏழைகளுக்கு உணவு அளிக்குமாறு, அனைத்து அமைச்சர்களையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அமைச்சர்கள் அனைவரும், அயோத்தி ராமர் கோவிலுக்கு, மக்களுடன் சேர்ந்து ரயில்களில் வருமாறும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
அமைச்சர்கள்கும்பாபிஷேகம்பிரதமர் மோடிராமர் கோயில்
Advertisement
Next Article