முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ராமர் கோயில் கும்பாபிஷேகம்..!! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நாளை இயங்காது..!! நோயாளிகளின் கதி..?

08:00 AM Jan 21, 2024 IST | 1newsnationuser6
Advertisement

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது. நாளை மதியம் 12.20 மணிக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி பங்கேற்கு ராமர் சிலைக்கு சடங்குகள் செய்ய உள்ளார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என 3 ஆயிரம் விவிஐபிக்கள் உள்பட மொத்தம் 10,000 பேர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், நாளைய தினம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எய்ம்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”நாளைய தினம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி மருத்துவமனை காலையில் இருந்து பிற்பகல் 2.30 மணி வரை இயங்காது. இருப்பினும் நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை பிரிவுகள் உள்பட சில முக்கிய சிகிச்சை பிரிவுகள் இயங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
எய்ம்ஸ் மருத்துவமனைடெல்லிமருத்துவமனைராமர் கோயில் கும்பாபிஷேகம்
Advertisement
Next Article