முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ராமர் கோவில் கும்பாபிஷேகம்!… விருந்தினர்களுக்கு 2 பெட்டிகளில் வழங்கப்படும் நினைவு பரிசுகள்!… என்னென்ன தெரியுமா?

07:18 AM Jan 11, 2024 IST | 1newsnationuser3
Advertisement

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் கூடுதலாக 11,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதற்கிடையில், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் நோக்கில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் என பொது மக்களை பிரதமர் மோடி சமீபத்தில் கேட்டு கொண்டார். ஜனவரி 12 முதல் ராம்லாலாவின் பிரான் பிரதிஷ்டா மோஹோத்ஸவிற்காக விருந்தினர்கள் அயோத்திக்கு வரத் தொடங்குவார்கள். ராம் நகரில் 11,000க்கும் மேற்பட்ட விஐபி விருந்தினர்களை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜனவரி 12 முதல், அயோத்திக்கு வரும் விருந்தினர்களுக்கு சனாதன் சேவா டிரஸ்ட் மூலம் ராம ஜென்மபூமி தொடர்பான நினைவுப் பரிசு வழங்கப்படும். இந்தநிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு இரண்டு பெட்டிகளில் நினைவுப் பரிசுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து சனாதன் சேவா நியாஸின் நிறுவனரின் சீடரான ஷிவோம் மிஸ்ரா கூறுகையில், சனாதன தர்மத்தில் விருந்தினரை கடவுளாக கருதுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், அயோத்திக்கு வரும் அனைத்து விருந்தினர்களுக்கும் ராமர் தொடர்பான நினைவுப் பொருட்கள் தயார் செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசாக வழங்கப்படும். இந்த பரிசு ராமருடன் தொடர்புடையதாக இருக்கும், அதாவது ராம்லாலாவின் பிரசாதம் மற்றும் நினைவுச்சின்னம் இதில் அடங்கும். ஒரு பெட்டியில் பிரசாதம், பசுவின் பாலில் இருந்து பெறப்பட்ட நெய்யில் செய்யப்பட்ட பெசன் லட்டு மற்றும் ராமானந்தி பாரம்பரியத்தின் படி புனிதமான துளசி இலை ஆகியவை இருக்கும்.

இரண்டாவது பெட்டியில் ராமர் தொடர்பான பொருட்கள் இருக்கும். ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் போது, ​​ராமர் கோவில் கருவறையில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட மண், ஒரு பெட்டியில் வைத்து கொடுக்கப்படும். இதனுடன் சரயு தண்ணீரும் பேக் செய்யப்பட்டு நினைவுப் பரிசாக வழங்கப்படும். இந்த பெட்டியில் பித்தளை தட்டும் இருக்கும். மேலும் ராமர் கோவில் தொடர்பான நினைவுப் பரிசாக வெள்ளி நாணயம் வழங்கப்படும். ராமர் கோவிலின் வரலாறு மற்றும் அதன் போராட்டங்களை சித்தரிக்கும் இந்த இரண்டு பெட்டிகளும் வைக்க சணல் பையும் தயார் செய்யப்பட்டுள்ளது.

Tags :
2 boxes gifts2 பெட்டிகளில் பரிசுகள்Ram Temple Kumbabhishekamராமர் கோவில் கும்பாபிஷேகம்விருந்தினர்களுக்கு சிறப்பு பரிசுகள்
Advertisement
Next Article