ராமர் கோவில் திறப்பு விழா: ஸ்ரீ ராமரின் சிலை பிரதிஷ்டை செய்வது முதல் கோவிலின் கும்பாபிஷேகம் வரை.! வரலாற்று நிகழ்வுகளின் முழு அட்டவணை.!
வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் இருக்கும் இந்துக்களின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக அமைய இருக்கிறது. பல நூற்றாண்டுகளின் கனவான ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் ஸ்ரீராமரின் குழந்தை பருவ சிலை அவரது கோவிலில் பிரதிஷ்டை செய்யும் விழா ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று நடத்தி வைத்து இருக்கிறார். இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 7000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் நிகழ்வு ஜனவரி 15ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி கோவில் கும்பாபிஷேகத்துடன் முடிவடைய உள்ளது. சிறப்புமிக்க நிகழ்ச்சிகளின் ஒவ்வொரு நாளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரார்த்தனைகள் மற்றும் பஜனைகளில் தொடங்கி ஸ்ரீராமரின் குழந்தை பருவ சிலை பிரதிஷ்ட்டை செய்வது வரை பல்வேறு தெய்வீக நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. இந்த புனித மிகுந்த 8 நாட்களிலும் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் பிரார்த்தனைகளின் பட்டியலை விரிவாக காணலாம்.
ஜனவரி 15 2024 கர்மாக்கள் முடிவு மற்றும் மகர சங்கராந்தி:
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் முதல் நாளான ஜனவரி 15ஆம் தேதி அன்று மகர சங்கராந்தி பூஜைகள் நடத்தப்பட்டு கர்மாக்கள் முடிவுக்கு கொண்டு வரப்படும். இதனைத் தொடர்ந்து ராம் லாலா என்று அழைக்கப்படும் குழந்தை ஸ்ரீராமரின் சிலை ராமர் கோவிலில் உள்ள புனிதப்படுத்தப்பட்ட இடத்தில் வைக்கப்படும். அங்கு வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது .
ஜனவரி 16, 2024 - ராம் மந்திரில் சடங்குகள் தொடங்குதல்: குழந்தை ஸ்ரீராமருக்கு அவரது இல்லமான ராம் மந்திரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட இருக்கிறது. குழந்தை ராமர் அவரது இல்லத்திற்கு திரும்பியதை சிறப்பிக்கும் வகையில் இந்த பூஜைகள் நடைபெற உள்ளது. பூஜைகள் முடிவடைந்த பின்னர் ஸ்ரீராமருக்கான சிறப்பு சடங்குகள் தொடங்கும்.
ஜனவரி 17, 2024 - ராம்லாலா சிலையின் நகர சுற்றுப்பயணம்: ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் மூன்றாவது நாளான ஜனவரி 17ஆம் தேதி ராம் லாலா சிலை அயோத்தி நகர் முழுவதும் புனித ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.
ஜனவரி 18, 2024 சிலை பிரதிஷ்டை துவக்கம்: ராம் லாலா சிலை பிரதிஷ்ட்டை செய்வதற்கான நிகழ்வுகள் தொடங்கும். சிலை வைப்பதற்கான வாஸ்து பூஜைகளும் ராம் லாலாவின் சிலையை புனித படுத்துவதற்கான சடங்குகளும் இந்த நாளில் நடைபெறும்.
January 19, 2024 புனித யாகத்திற்கான நெருப்பு குண்டம் அமைத்தல்: புனித யாதிற்கான நெருப்பு குண்டம் அமைக்கப்பட்டு அதற்கான சிறப்பு வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டு யாக குண்டத்தில் நெருப்பு மூட்டப்படும்.
ஜனவரி 20, 2024: வாஸ்து சடங்குகள் மற்றும் 81 கலசங்களுடன் புனிதப்படுத்தும் நிகழ்வு: இந்த நாளில் ராமர் கோவிலின் கருவறை புனிதப்படுத்தப்படும். புனித நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட நீர் மற்றும் 81 கலசங்களுடன் கோவிலின் கருவறை புனிதப்படுத்தப்படும். இதனைத் தொடர்ந்து வாஸ்து அமைதிக்கான பூஜையும் நடைபெறும்.
ஜனவரி 21, 2024 125 கலசங்களுடன் ராம் லாலா சிலைக்கு புனித குளிப்பாட்டுதல் நிகழ்வு: ராம் லாலாவின் சிலை அவரது புகழ் இடத்தில் வைத்து சடங்குகள் மற்றும் வழிபாடு செய்யப்படும். இதனைத் தொடர்ந்து ராம் லாலாவின் சிலை 125 கலசங்களைக் கொண்டு புனித நீராட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
ஜனவரி 22, 2024 ராம்ளா சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக நிகழ்வு: இத்தனை நாட்கள் நடைபெற்ற பூஜைகள் மற்றும் சடங்குகளின் உச்சமாக ராம் லாலாவின் சிலை பிரதிஷ்டை நிகழ்வு மற்றும் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு நடைபெறும். மங்களகரமானமங்களகரமான மிருகஷிரா நட்சத்திரத்தில் ஸ்ரீராமரின் சிலை பிரம்மாண்டமான பூஜை நடைபெறும்.
சிலை பிரதிஷ்டை விழாவிற்கான முக்கியமான முஹூர்த்தம்: புனிதமிக்க ஸ்ரீராமரின் குழந்தை வடிவ சிலை பிரதிஷ்டை செய்வதற்கான முகூர்த்த நேரம் சாஸ்திரங்களின் அடிப்படையில் குறிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்வு 12:29 முதல் 12:30 மணிக்குள் நள்ளிரவில் நடைபெறும். சரியாக 84 நொடிகளில் தெய்வீகத் தன்மை ராமர் சிலையோடு ஒன்றி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளின் கனவாக இருக்கும் ராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கோவில் திறப்பு விழா இந்த நிகழ்வோடு சிறப்பாக தொடங்குகிறது.