மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமர் கோவில், சிறப்பு விளக்குகள், 'கர்ப்ப கிரகத்தில்' பயன்படுத்தப்படும் பாரம்பரிய தீபம் | முழு விவரங்கள்.!
ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்விற்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. நகரம் முழுவதும் விளக்குகளாலும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வான ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக தயாராகி வருகிறது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே பாக்கி இருக்கும் நிலையில் ராமர் கோவில் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
ராமர் கோவில் அலங்காரங்களுக்காக இயற்கையான மலர்களே பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். குளிர்காலம் என்பதால் மலர்கள் நீண்ட நேரம் வாடாமல் வாசனை தரும். மேலும் கும்பாபிஷேக தினமான ஜனவரி 22 ஆம் தேதியும் இயற்கையான மலர்களைக் கொண்டே கோவில் அலங்கரிக்கப்பட உள்ளது. கோவில் அலங்காரம் மற்றும் மின் விளக்குகள் அலங்காரத்திற்கென தனி குழுக்கள் அமைக்கப்பட்டு கோவிலின் அலங்காரப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ள ராமர் கோவில் மற்றும் அயோத்தி வீதிகள் காண்போரின் கண்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது. கோவிலின் வெளிப்புறம் உள்ள அலங்காரங்களில் மின்விளக்குகளை கொண்டு தீபம் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறதுபாரம்பரியத்தை நிலை நிறுத்தும் வகையில் இது போன்ற அலங்காரம் செய்யப்பட்டிருப்பதாக ராம் மந்திர் அறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ராம்ளாவின் சிலை வைக்கப்பட்டிருக்கும் கருவறையில் பாரம்பரியமான தீபங்கள் ஏற்றப்பட்டு இருக்கிறது. தீபங்களின் ஒளியில் குழந்தை ராமரின் சிலை தெய்வீகமாக வீற்றிருக்கிறது.
51 இன்ச் உயரம் கொண்ட ராமர் சிலை மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகி ராஜ் என்பவரால் வடிவமைக்கப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டு கோவிலில் உள்ள கற்பகிரகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டிங் ஆனது. மாலை நேரத்தில் கண் கவரும் வண்ண விளக்குகளால் ஒளிரும் ராமர் கோவில் காண்பதற்கே அரிய காட்சியாக இருக்கிறது.