"ராமர் கோவில்" நன்கொடை, வரி விலக்கிற்கு பொருந்துமா.? வருமான வரி சட்டம் என்ன சொல்கிறது.?
ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் மூலம் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலின் பராமரிப்பு புணரமைப்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகளுக்காக வழங்கப்படும் நன்கொடைகள் வருமான வரி சட்டம் 1961, 80G (2) (b) பிரிவின் கீழ் வருமான வரிவிலக்கு பெறுவதற்கு தகுதியானவை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ராமர் கோவில் புனரமைப்பிற்காக வழங்கப்படும் நன்கொடைகளில் 50 சதவீதம் வரி விலக்கிற்கு தகுதியானவை என அரசு அறிவித்துள்ளது. ஆனால் 2000 ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் நன்கொடைகள் வருமான வரி விலக்கிற்கு உட்படாது எனவும் தெரிவித்துள்ளது . ராமர் கோவில் வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னமாகவும் பொது வழிபாட்டுத்தலமாகவும் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் புனரமைப்பிற்கு வழங்கப்படும் நன்கொடைகள் வரி விலக்கிற்கு தகுதியானவை என வருமானவரித்துறை தெரிவிக்கிறது.
வருமான வரிச் சட்டம் 1961-இன் படி தொண்டு நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களின் புனரமைப்பிற்காக நன்கொடைகள் வழங்கும் தனிநபர்கள் நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளும் வரிவிலக்கு சலுகையை பெறலாம் என தெரிவிக்கிறது. இதன் மூலம் அவர்கள் 50% முதல் 100% வரிவிலக்கு சலுகையை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த சட்டம் தெரிவிக்கிறது.
2020-21 நிதியாண்டில் இருந்து ராமஜென்ம பூமி அறக்கட்டளை மற்றும் ராமர் கோவில் வரலாற்று சிறப்புமிக்க தளமாக அறிவிக்கப்பட்டு அதற்கு வழங்கும் நன்கொடைகள் வரி விலக்கிற்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனவே 2020-21 நிதி ஆண்டிலிருந்து ராமர் கோவிலுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் வரி விலக்கிற்கு பொருந்தும். மேலும் ஜனவரி 22 2024 கும்பாபிஷேகம் மற்றும் பிரதிஷ்டை செய்யப்படும் சிறப்பு தினமாக இருந்தாலும் இந்தத் தேதி வருமான வரி பிரிவு 80G சட்டத்தின் கீழ் நேரடியாக பொருந்தாது என ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்து இருக்கிறது.