For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: "பழங்கள் மட்டுமே சாப்பிட்டு கடுமையான விரதம்.." மரக்கட்டிலில் போர்வையுடன் உறங்கும் பிரதமர் மோடி.!

03:33 PM Jan 16, 2024 IST | 1newsnationuser7
ராமர் கோவில் கும்பாபிஷேகம்   பழங்கள் மட்டுமே சாப்பிட்டு கடுமையான விரதம்    மரக்கட்டிலில் போர்வையுடன் உறங்கும் பிரதமர் மோடி
Advertisement

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. கோவில் கும்பாபிஷேகம் நிகழ்வு இன்னும் ஒரு வாரத்தில் துவங்க உள்ள நிலையில் அதற்கான சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகள் இன்று முதல் ஆரம்பமாகி இருக்கிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகளை தொடங்கி வைக்க இருக்கும் தலைமை புரவலர் அனில் மிஸ்ராவுக்கு 10 விதமான முறைகளில் நீரால் ஸ்நானம் செய்யப்பட இருக்கிறது.

Advertisement

மேலும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் யாகம் நடைபெற இருக்கும் நவக்கிரக குன்டத்தின் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. ப்ரான் பிரதிஷ்டை விழாவில் 150 மத குருமார்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்ய இருப்பதாக வேத அர்ச்சகர் லட்சுமி காந்த் தீக்ஷித் தெரிவித்துள்ளார். இன்று தொடங்கும் பிரார்த்தனைகள் ஜனவரி 22 ஆம் தேதி மாலை வரை நடைபெறும் எனவும் லட்சுமி காந்த் தீக்ஷித் தெரிவித்துள்ளார். கும்பாபிஷேகத்திற்கான உரிமை கூறும் பூஜைகளும் பரிகாரம் மற்றும் விஷ்ணு பூஜையும் இன்று நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ராம் லாலாவின் குழந்தை பருவ சிலை புனிதப்படுத்தப்பட்டு கோவிலை நோக்கி எடுத்துச் செல்லப்படும்.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் விழாவை தலைமை ஏற்று நடத்த இருக்கும் பிரதமர் மோடி அதற்காக செய்ய வேண்டிய சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகளை கேட்டறிந்து அதனை பின்பற்றி வருகிறார். ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக 11 நாட்கள் விரதம் இருந்த பிரதமர் மோடி யாம விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறார். கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு 3 நாட்கள் முன்பிருந்து விழா முடியும் வரை பிரதமர் மோடி மெத்தையில் உறங்காமல் மரக்கட்டிலில் போர்வை விரித்து உறங்க இருக்கிறார். மேலும் இந்த மூன்று நாட்களும் பழங்களை மட்டுமே சாப்பிட்டு கடுமையான விரதம் இருக்கு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரான் பிரதிஷ்ட்டை செய்யப்பட இருக்கும் ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் மோடி முழு விரதம் இருப்பார். அந்த நாளில் ராமர் கோவில் கட்டுமானத்திற்காக உயிர் தியாகம் செய்த பக்தர்களை நினைவுகூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஜதாயுகி சிலையை வழிபடுவார். இவற்றோடு சக்தி வாய்ந்த மந்திரங்களையும் ஜெபிக்க இருக்கிறார். இவற்றோடு ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை சந்தித்து தனது மகிழ்ச்சியையும் அர்ப்பணிப்பையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.

ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்படும் நிகழ்வில் 121 அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை செய்ய இருக்கின்றனர் . வாரணாசியை சேர்ந்த தலைமை அர்ச்சகர் கணேஸ்வர் சாஸ்திரி டிராவிட் மற்றும் காசியை சேர்ந்த தலைமை அர்ச்சகர் லட்சுமி காந்த் தீக்ஷித் ஆகியோர் தலைமையில் வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற இருக்கிறது. இவர்களோடு பிரதமர் நரேந்திர மோடியும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் மற்றும் பிரதிஷ்டை நிகழ்ச்சிகளை தலைமை ஏற்று நடத்த உள்ளார்.

ஸ்ரீராமரின் பக்தர்கள் அனைவரும் ஜனவரி 22ஆம் தேதி கோவில் கும்பாபிஷேக நிகழ்விற்கு வரவேண்டாம் என பிரதமர் மோடி ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்தார். கோவில் கும்பாபிஷேக நிகழ்வு மற்றும் பூஜைகள் முடிந்த பின் ஜனவரி 23ஆம் தேதிக்கு பிறகு அனைவரும் கோவிலுக்கு வரலாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை சிறப்பிக்கும் வகையில் வீட்டிலேயே விளக்கேற்றி ஸ்ரீராமருக்கான பஜனை செய்யுங்கள் எனவும் கேட்டுக் கொண்டார். இதனையே பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார். நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து பக்தர்களும் ஜனவரி 22 ஆம் தேதி கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டால் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதால் கும்பாபிஷேகம் முடிந்த பின்பு ராமர் கோயிலை தரிசியுங்கள் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Tags :
Advertisement