ராமர் கோவில் கும்பாபிஷேக விழா: "சித்திரங்களுடன் பளிங்கு கற்களால் ஜொலிக்கும் கருவறையின் அழகிய தோற்றம்.." வீடியோ இணைப்பு.!
ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 22 ஆம் தேதி அயோத்தியில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் சடங்குகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் நாட்டில் இருக்கும் பலதரப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பழங்குடியின மக்களின் பிரதிநிதித்துவம் போன்றவற்றோடு மரபுகளின் அடிப்படையில் கும்பாபிஷேக விழா நடைபெறும் என ராம் மந்திர் அறக்கட்டளை தெரிவித்து இருக்கிறது.
மேலும் 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு சடங்குகள் மற்றும் பூஜைகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று ராம் லாலாவின் சிலை கோவில் வளாகத்திற்குள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வாக ராம் லாலாவின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. இதற்காக சிறப்பான வேலைப்பாடுகளுடன் கருவறை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருவறை எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பான எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா டிவி ராமர் கோவில் கருவறையின் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது.
இந்த காணொளியில் ராமர் கோவிலின் கருவறை மற்றும் அதன் சிறப்பம்சங்களை காணலாம். ராமர் கோவிலின் கருவறையில் ஸ்ரீராமரின் குழந்தை பருவ சிலையை நிறுவுவதற்காக உயரமான பீடம் ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் கருவறை சிறப்பு வாய்ந்த வெள்ளை பளிங்கு கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பளிங்கு கற்களில் அற்புதமான வேலைபாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இவை கடினமான மற்றும் அதிக வேலைப்பாடுடன் கூடிய கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது.
இவற்றை ஒருவர் காணும் போது உலகில் இருக்கும் மற்ற அனைத்தையும் மறந்து இந்தக் கருவறையின் அழகையே ரசிக்கும்படி இருக்கிறது. கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அவற்றிற்கான பூஜை மற்றும் சடங்குகள் நேற்றிலிருந்து தொடங்கி ஜனவரி 21 ஆம் தேதி வரை நடைபெறும் என ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்திருக்கிறார் . கோவில் கும்பாபிஷேகத்திற்கு வேண்டிய அனைத்து பூஜைகளும் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். சிலை பிரதிஷ்டை செய்யப்படும் தினத்தில் 11 மத குருமார்கள் கடவுள்கள் மற்றும் பெண் கடவுளர்களான தேவிகளுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறும் என தலைமை மத குருமார்களில் ஒருவரான ஆச்சார்யா சத்தியேந்திர தாஸ் தெரிவித்திருக்கிறார்.
கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் ஸ்ரீராமரின் குழந்தை வடிவ சிலையான ராம் லாலா அவரது பிறந்த பூமியான அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி நிறுவப்படும் என ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று நடத்த இருக்கிறார். இதற்கான சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை வாரணாசியைச் சார்ந்த வேத சாஸ்திரங்களின் தலைமை மதகுரு லட்சுமி காந்த் தீக்ஷித் தலைமை ஏற்று நடத்துவார்.