For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'ராமர் என் கனவில் வந்தார்'!… நான் அயோத்திக்கு செல்லமாட்டேன்!... பீகார் அமைச்சர் தேஜ் பிரதாப்!

09:30 AM Jan 15, 2024 IST | 1newsnationuser3
 ராமர் என் கனவில் வந்தார்  … நான் அயோத்திக்கு செல்லமாட்டேன்     பீகார் அமைச்சர் தேஜ் பிரதாப்
Advertisement

ராமர் தனது கனவில் வந்ததால், அதனால் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தி செல்லப் போவதில்லை என்று பீகார் அமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான தேஜ் பிரதாப் கூறினார்.

Advertisement

வரும் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா, பல எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்புகளை அனுப்பியது, ஆனால் அவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே வரலாற்று நிகழ்வில் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர். அந்தவகையில், பீகார் அமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜ் பிரதாப்-க்கும் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ராமர் தனது கனவில் வந்ததால், அதனால் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்று தேஜ் பிரதாப் கூறியுள்ளார்.

பாட்னாவில் நடைபெற்ற மதச்சார்பற்ற சேவக் சங்கத்தின் நிறுவன தின விழாவில் பேசிய அவர், ஸ்ரீராம் என் கனவில் வந்தார், இவர்கள் வெறும் போலியானவர்கள், எனவே நான் ஜனவரி 22 ஆம் தேதி அயோத்திக்கு செல்லமாட்டேன் என்று ராமர் கூறியதாக தேஜ் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. எல்லா சங்கராச்சாரியார்களின் கனவிலும் அவர் வந்தார் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். முன்னதாக, சனாதன தர்ம விதிகளை மீறி இந்த விழா நடத்தப்படுகிறது. ஜோதிஷ் பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி கூறியதை குறிப்பிட்டு பேசினார் தேஜ்.

Tags :
Advertisement