ஜெயா அமிதாப் பச்சன் என்று சொல்லாதீங்க..!! பெண்களுக்கு தனி அடையாளம் இல்லையா? - மாநிலங்களவையில் முற்றிய சண்டை..!!
சமாஜ்வாதி கட்சியின் எம்பியான ஜெயா பச்சனை ஜெயா அமிதாப் பச்சன் என ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தங்கர் குறிப்பிட்டார். இதனால் மாநிலங்களவையில் ஜெயா பச்சன் நேரடியாக ஜெகதீப் தங்கரிடம் சண்டை போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று ராஜ்யசபா தொடங்கியது. துணை ஜனாதிபதியான ஜெகதீப் தங்கர் தலைமை வகிக்கும் ராஜ்யசபா எம்பிக்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். அப்போது தான் ஜெகதீப் தங்கர் கூறிய வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியது.
எம்.பி ஜெயா பச்சனை கணவனின் பெயரோடு சேர்த்து ஜெயா அமிதாப் பச்சன் என அழைத்தார். அமிதாப் பச்சன் - ஜெயா பச்சன் ஆகியோர் கணவன் மனைவி தான் என்றாலும் கூட தனக்கு கணவரை வைத்து அடையாளம் காட்ட வேண்டாம் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் மீண்டும் 2வது முறையாக ஜெகதீப் தங்கர் இவ்வாறு கூறியதால் ஜெயா பச்சன் கடும் கோபமடைந்தார்.
இந்த விவகாரத்தில் அவைத் தலைவரை கண்டித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது வெள்ளையனே வெளியேறு போராட்டத்தைப் போல எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறுவதாக ஜகதீப் தன்கர் கிண்டல் செய்தார். இதைத்தொடர்ந்து, அவையில் எதிர்க்கட்சியினர் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக கூறி, பாஜக குழுத் தலைவர் ஜெ.பி.நட்டா கண்டனத் தீர்மானம் கொண்டுவந்தார்.
Read more ; சைவ பிரியர்களே இதை நோட் பண்ணிக்கோங்க..!! எவ்வளவு நன்மைகள் தெரியுமா..?