For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BJP | பாஜக-வில் இணையும் ரஜினிகாந்த் பட நடிகை.!! தொண்டர்கள் முன்னிலையில் உணர்ச்சிபூர்வமான பேட்டி.!!

03:05 PM Apr 03, 2024 IST | Mohisha
bjp   பாஜக வில் இணையும் ரஜினிகாந்த் பட நடிகை    தொண்டர்கள் முன்னிலையில் உணர்ச்சிபூர்வமான பேட்டி
Advertisement

BJP: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் முரட்டுக்காளை மற்றும் கழுகு ஆகிய திரைப்படங்களில் நடித்த சுமலதா பாஜகவில் இனிய இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

Advertisement

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது . மத்தியிலாலும் பாரதிய ஜனதா கட்சி(BJP) மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு 18-வது பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 7 கட்டங்களாக பல மாநிலங்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு ஜூன் 4-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இந்த முறை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரமாக போராடி வருகிறது. தங்களது கட்சி வேட்பாளர்களையும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து அரசியல் தலைவர்கள் இந்தியா முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக சார்பாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இந்தியாவின் பல பகுதிகளிலும் சென்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். மீண்டும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி மத்தியில் அமைய இருப்பதாக தேர்தல் கணிப்புகள் வெளியானதை தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்களும் சுயேட்சை எம்பி மற்றும் எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் மாண்டியா மக்களவைத் தொகுதியின் உறுப்பினரும் நடிகையுமான சுமலதா பாஜகவில் இணைய இருப்பதாக தெரிவித்திருக்கிறார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கழுகு மற்றும் முரட்டுக்காளை உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சுயேட்சை எம்பி-யாக மாண்டியா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்நிலையில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய அவர் பாஜகவில் இணைய இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மாண்டியா மக்கள் தனக்கு வழங்கிய ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Read More: கூகுள் நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Tags :
Advertisement