For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரஜினியின் படத்தை முந்தியதா கோட் திரைப்படம்..? இதுவரை எத்தனை கோடி வசூல்..?

Code film is close to 400 crore collection. Therefore, in a few weeks, it is possible that the Jailer Collection Code film will also be released.
01:35 PM Sep 16, 2024 IST | Chella
ரஜினியின் படத்தை முந்தியதா கோட் திரைப்படம்    இதுவரை எத்தனை கோடி வசூல்
Advertisement

ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் கிட்டத்தட்ட 650 கோடி வசூலை பெற்றிருந்தது. இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விஜய்யின் கோட் படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம், நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி தியேட்டரில் வசூலை வாரி குவித்து வருகிறது. கடந்த வாரம் தமிழ் படங்கள் வெளியாகாததால், பெரும்பாலான திரையரங்குகளில் கோட் படம் தான் திரையிடப்பட்டது.

Advertisement

அந்த வகையில், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதன்படி, சனிக்கிழமை ரூ.14 கோடி வசூல் செய்த கோட் படம் ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக ரூ.1 கோடி வசூல் செய்தது. இந்நிலையில், ஜெயிலர் வசூலை கோட் படம் நெருங்குமா என பலரும் எதிர்பார்த்த காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது, கோட் படம் 400 கோடி வசூலை நெருங்கியுள்ளது. ஆகையால், இன்னும் சில வாரங்களில் ஜெயிலர் வசூலை கோட் படம் முந்தவும் வாய்ப்புள்ளது. ஆனால், இந்த வாரம் தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்கள் வெளியாகிறது. கிட்டத்தட்ட 7 படங்கள் வெளியாகுவதால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கலும் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிலும் சசிகுமாரின் நந்தன், சதீஷின் சட்டம் என் கையில், ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது. இவையெல்லாம் மினிமம் பட்ஜெட் படங்கள் என்றாலும் ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர். ஆகையால், இந்த வாரம் கோட் வசூல் குறைவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் மிக விரைவில் கோட் வசூலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளது.

Read More : ’என் கணவர் அடிக்கடி இதை சொல்வார்’..!! ’என் கண்ணு முன்னாடியே’..!! உருகிய நடிகை மீனா..!!

Tags :
Advertisement