முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'Kalki 2898 AD' திரைப்படத்தை பாராட்டி தள்ளிய ரஜினி..!! 2ஆம் பாகத்திற்கு வெயிட்டிங்..!!

Rajinikanth praised the film crew saying that the film Kalki has taken Indian cinema to the next level.
01:03 PM Jun 29, 2024 IST | Chella
Advertisement

பிரபாஸ் நடிப்பில் வெளியான ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், வைஜயந்தி மூவீஸ் தயாரிப்பில் நடிகர் பிரபாஸ் உடன் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படூகோன் உட்பட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Advertisement

சுமார் 600 கோடி செலவில் 3 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகியுள்ள கல்கி 2898 AD கலியுகத்தில் கடைசிக் கட்டத்தில் தோன்றும் கல்கி துஷ்ட சக்திகளை அழித்து கலியுகத்தை முடித்து வைக்கிறது. இப்படம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில், கல்கி படம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று விட்டதாக படக்குழுவிற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ஆர்வமாக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Read More : ஆற்றை கடக்க முயன்ற பீரங்கி..!! திடீரென வந்த வெள்ளம்..!! 5 ராணுவ வீரர்கள் மரணம்..!!

Tags :
kamalhaasanரஜினிகாந்த்
Advertisement
Next Article