முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறாரா ரஜினி..? திடீரென தூத்துக்குடிக்கு வந்தது ஏன்..?

01:43 PM Dec 26, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருந்த இப்படம் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படி ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் சென்னை வெள்ளம் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளான பகுதிகளுக்கு நிவாரண பொருட்களையும் அனுப்பி வைத்தார் ரஜினி. இந்நிலையில், இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் திடீரென தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு ரஜினி ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்துள்ளாரா என்கிற கேள்வியும் எழுந்து வந்தது. ஆனால் உண்மையில் அவர் வேட்டையன் படத்தின் படப்பிடிப்புக்காக அங்கு சென்றுள்ளார். ரஜினி விமான நிலையம் வந்தபோது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
தூத்துக்குடி மாவட்டம்ரஜினிகாந்த்வெள்ள பாதிப்புஜெயிலர் திரைப்படம்
Advertisement
Next Article