For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தொடர் வெற்றி: ஆறு விக்கெட் வித்தியாசத்தில் முதல் இடம் பிடித்த ராஜஸ்தான்!

08:55 AM Apr 07, 2024 IST | Mari Thangam
தொடர் வெற்றி  ஆறு விக்கெட் வித்தியாசத்தில் முதல் இடம் பிடித்த ராஜஸ்தான்
Advertisement

ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

Advertisement

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் 19-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 183 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 189 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாம் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது இடத்திலும் உள்ளன. பெங்களூரு அணி 4 தோல்வியுடன் 8வது இடத்தில் உள்ளது. நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் ஆடிய 3 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிக்கணக்கை தொடங்காமல் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடதக்கது.

Tags :
Advertisement