முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆட்டோ பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட 12 பேர் பலி..!!

Rajasthan: 12 dead in collision between auto-rickshaw and bus in Dholpur
04:58 PM Oct 20, 2024 IST | Mari Thangam
Advertisement

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள பாரி என்ற இடத்தில் ஆட்டோவும் பேருந்தும் மோதிக் கொண்டதில் 12 பேர் உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Advertisement

இந்த விபத்து குறித்து, பாடி காவல்துறையினர் கூறுகையில், "நள்ளிரவு 12 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்து சுனிபூர் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலை சென்று கொண்டிருந்தது. டெம்போவும் அதே சாலையில் சென்று கொண்டிருந்தது. திடீரென இரண்டும் மோதி விபத்துக்குள்ளானது. பாடி நகரில் உள்ள கரீம் காலனியில் இருக்கும் கும்மட் பகுதியைச் சேர்ந்த நஹானு மற்றும் ஜாகிர் குடும்பத்தினர் உயிரிழந்துள்ளனர். இரு குடும்பத்தினரும் பரௌலி கிராமத்தில் உள்ள தங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தனர். அங்கு திருமணத்திற்கு முந்தைய விருந்து நிகழ்ச்சி நடந்துள்ளது. 

விருந்து நிகழ்ச்சி முடிந்த பிறகு, அனைவரும் டெம்போவில் ஏறி திரும்பிக்கொண்டிருந்தனர். டெம்போ நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சுனிபூர் கிராமத்தில் சிறப்புப் பேருந்து ஒன்று டெம்போ மீது மோதியுள்ளது. காவல்துறையினரும், நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பாடி அரசு மருத்துவமனையில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தோல்பூரில் நடந்த சாலை விபத்தில் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. காயமடைந்தவர்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் போதுமான மருத்துவ சேவையை உறுதி செய்ய மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பலியானவர்கள் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பகவான் ஸ்ரீராமரைப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் எக்ஸ் தளப் பதிவில், தோல்பூரில் நடந்த சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. பலியானவர்களின் ஆத்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more ; பயங்கரம்.. காதலிக்க மறுத்த 11 ஆம் வகுப்பு மாணவியை உயிருடன் எரித்த காதலன்..!!

Tags :
auto-rickshawDholpurrajasthanroad accident
Advertisement
Next Article