சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்த ராஜபக்சே மகன்..!! தட்டித் தூக்கியது போலீஸ்..!! ரகசிய இடத்தில் விசாரணை..?
இலங்கை முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சேவுக்கு நமல், ரோஹிதா, யோஷிதா ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தான், சட்டவிரோத சொத்து குவிப்பு புகார் வழக்கில் யோஷித ராஜபக்சேவை போலீசார் கைது செய்துள்ளனர். பெலியத்த என்ற பகுதியில் வைத்து அவரை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதுதொடர்பாக யோஷித ராஜபக்சேவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், தற்போது அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் அதிபராக கோத்தபய ராஜபக்சே, பிரதமராக மகிந்த ராஜபக்சே இருந்தபோது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இது அப்போது மக்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்தது. இதையடுத்து, இருவரும் பதவியில் இருந்து விலகிய நிலையில், அங்கு இடைக்கால அரசு அமைந்தது. பின்னர், பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மெல்ல மெல்ல மீண்டது.
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் திசாநாயகே அபார வெற்றி பெற்று பதவியேற்றார். இந்த தேர்தலில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். ராஜபக்சே குடும்பத்தினர் மீதான செல்வாக்கு அடியோடு சரிந்த நிலையில், தற்போது அடுத்த அதிர்ச்சியாக யோஷித ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.